தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் உள்ளதாகவும், இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் வந்தன.
ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை அதுபற்றி பேசவே இல்லை.அவ்வப்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அவை வைரலாக பரவும். ஆனால் இருவரும் தங்கள் காதல் குறித்து இதுவரை ஊடகத்தில் பேசவே இல்லை.
ஆனால், உலகக்கோப்பை-யை நியூசிலாந்து அணி தான் வெல்லும், கேன் வில்லியம்சன் தான் தொடர் நாயகன் என கூறினார் பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன். கிட்டதட்ட அதே போல நடந்தது, ஆனால் கோப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கப்பட்டது. அதே நேரம், கிரிக்கெட் விதிப்படி தான் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், நியூசிலாந்து அணி தோற்றவில்லை என கோப்பையை இங்கிலாந்திடம் வழங்கும் முன் ICC தரப்பு மேடையிலேயே அறிவித்தது. இதனை, இந்த வருடம் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடக்கும் அதில் என்ன மாற்றமும் இல்லை என்று அடித்து கூறினார் பாலாஜி ஹாசன். அது இப்போது உண்மையாகியுள்ளது.
ஆம், தர்பார் படத்திற்கு பிறகு வந்த எந்த பட வாய்பையும் நயன்தாரா ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், இரு வீட்டு தரப்பிலும் திருமணம் ஏற்பாடுகள் சத்தமின்றி நடந்து வருவதாக கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள். அநேகமாக, இந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடக்கலாம் எனவும் கூறுகிறார்கள்.


