அப்படி நடந்தால் வெளியே போற முதல் ஆள் நான் தான் - ஆங்ஃரியான ஜாங்கிரி மதுமிதா


தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து அதே பரபரப்புடன் ஒளிபரப்பாகி கொண்டிருகின்றது. இது போதாதென்று நடிகை வனிதா விஜயகுமார் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். 

வந்தவர் எப்படியெல்லாம் கலகம் ஏற்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் முயற்சி செய்து வருகிறார். அந்த முயற்சியின் பயனாக நேற்று அபிராமி - முகென் நாற்காழியை தூக்கி அடிக்கும் அளவிற்கு கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர். 


இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில், ஆண்கள் பெண்களிடம் அதிகம் வேலை வாங்குகிறீர்கள் என்றும். ஆண்கள் பெண்களை அடிமை போல நடத்துகிறீர்கள். ஆண்களிடம் நேர்மை கிடையாது என்றும் கூறுகிறார். 


இதனை வனிதா மீண்டும் வந்த போது இதனை கூறினார். வெளியே செல்ல பத்து நிமிடம் கதவு திறந்து வைக்கப்படும். வெளியே செல்ல விரும்புவர்கள் வெளியே செல்லலாம் என இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு பகுதி உள்ளது. 

அப்படி பத்து நிமிடம் கதவு திறந்து வைக்கப்பட்டால் வெளியே செல்லும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் என்று கோபமாக கூறுகிறார் மதுமிதா.
Previous Post Next Post
--Advertisement--