அதிமுக ஆட்சி அமைக்கிறது! தமிழ் ஊடகம் வெளியிட்ட கள ஆய்வு முடிவுகள்!

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 135 முதல் 150 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், திமுக கூட்டணி 80 முதல் 95 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் ஒரு முன்னணி செய்தி நிறுவனத்தின் விரிவான கள ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும், பல தொகுதிகளில் திமுக மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட், ஜனவரி மற்றும் தற்போதைய கட்டங்களில் 234 தொகுதிகளிலும் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 150 சாம்பிள்கள் (மொத்தம் கிட்டத்தட்ட 35,100) எடுக்கப்பட்டன.

ஆனால், எண்ணிக்கை மட்டும் அல்லாமல், செய்தியாளர்கள், கல்லூரி மாணவர்கள், ஜர்னலிசம் பயிற்றுவித்தவர்கள் மூலம் நேரடி களப் பேட்டிகள், பல்வேறு தரப்பினருடன் (அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள்) உரையாடல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

“சர்வே” என்று சொல்லாமல், நட்பு ரீதியாகப் பேசி உண்மையான கருத்துகளைப் பெற்றதாக நிறுவனம் தெரிவித்தது.முக்கிய முடிவுகள்:

  • 52% மக்கள் ஆட்சி மாற்றம் கட்டாயம் தேவை என்று கூறுகின்றனர்.
  • ஆட்சி மாற்றத்தில் 50% பேர் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என விரும்புகின்றனர்.
  • அதிமுக ஆட்சி வேண்டும் என்பதற்கான காரணம்: “ஐந்து ஆண்டுகள் திமுக இருந்தது; அடுத்த ஐந்து ஆண்டுகள் அதிமுக இருக்கட்டும்” (57%), சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தில் உறுதியும் கட்டுப்பாடும் இருக்கும் என்ற நம்பிக்கை.
  • திமுகவுக்கு எதிரான எதிர்மறை அலை, அரசு ஊழியர்களின் கடுமையான அதிருப்தி, கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான பூசல், போதைப் பழக்கம் அதிகரிப்பு ஆகியவை திமுகவின் வாக்கு சதவீதத்தை 2-5% குறையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • அதிமுக-பாஜக கூட்டணியின் வாக்கு சதவீதம் 39%-லிருந்து 43%-ஆக உயரும் என்று ஆய்வு கூறுகிறது.

தலைவர்கள் மற்றும் பிரசார ஈர்ப்பு:

  • “யாருடைய பிரசாரம் ஈர்ப்புடையதாக உள்ளது?” என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி முதலிடம், மு.க. ஸ்டாலின் இரண்டாவது இடம், சீமான் மூன்றாவது இடம், விஜய் நான்காவது இடம்.
  • திமுகவை வெல்லும் ஆற்றல் படைத்த கட்சி எது? என்ற கேள்விக்கு 75% பேர் அதிமுகவைச் சொல்கின்றனர்.
  • தேர்தல் அறிக்கையில் ஈர்ப்பு: அதிமுக முதல் இடம், திமுக இரண்டாவது, நாம் தமிழர் மூன்றாவது, தவெக நான்காவது.
  • 2021 திமுக தேர்தல் அறிக்கை நிறைவேற்றத்தில் 85% பேர் அதிருப்தி தெரிவித்தனர் (15% மட்டுமே திருப்தி).
  • ஆட்சி அதிகாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திறன்: எடப்பாடி பழனிசாமி முதல் இடம், மு.க. ஸ்டாலின் இரண்டாவது.
  • தமிழ்நாடு வளர்ச்சிக்கு யார் சிறந்தவர்? எடப்பாடி பழனிசாமி 40%, மு.க. ஸ்டாலின் 34%, சீமான் 21%, விஜய் 5%.
  • மு.க. ஸ்டாலின் மீது எதிர்மறை கருத்து 85%.

நலத்திட்ட உதவி:

  • திமுகவின் ₹8,000 கூப்பன் vs அதிமுகவின் ₹10,000 உதவித் தொகை – 89% பேர் ₹10,000 பண உதவியை விரும்புகின்றனர்.

நாம் தமிழர் & தவெக நிலை:

  • நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என 25% பேர் விரும்புகின்றனர். காரைக்குடி, கன்னியாகுமரி ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு.
  • தவெக ஆட்சிக்கு வர வேண்டும் என 18% பேர் விரும்புகின்றனர். 3 முதல் 5 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
  • ஆனால், திமுக-அதிமுக இடையேதான் நேரடிப் போட்டி. விஜய் கூறும் “திமுக vs தவெக” போட்டி களத்தில் இல்லை என ஆய்வு வலியுறுத்துகிறது.

குறிப்பிடத்தக்க பின்னணி:

அரசு ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் அதிருப்தி அதிகமாக உள்ளது. கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் EPF பிரச்னை, சிறு தொழில் நிறுவனங்கள் மூடல் ஆகியவை மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

புதிய வாக்காளர்கள் (18-19 வயது) எண்ணிக்கை 10 லட்சத்திலிருந்து 14 லட்சமாக உயர்ந்துள்ள நிலையிலும், அவர்கள் அனைவரும் ஒரே கட்சிக்கு ஆதரவாக இல்லை என ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு முடிவுகள் தேர்தல் நிலவரத்தைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், தேர்தல் பிரசாரம் தீவிரமடையும் போது நிலைமை மாற வாய்ப்பு உள்ளது எனவும் நிறுவனம் சுட்டிக்காட்டியது.

(இந்தச் செய்தி ஒரு தனியார் செய்தி நிறுவனமான தமிழ் ஊடகம் கள ஆய்வு அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.)

Summary in English : A survey indicates the AIADMK alliance may secure 135 to 150 seats, while the DMK alliance could win 80 to 95 seats in the upcoming Tamil Nadu election. Many respondents prefer a change in government, with support for AIADMK due to expectations of stable administration. DMK faces challenges in several constituencies, possibly finishing third in some.