உடல் மெலிந்து ஆளே மாறிப்போன நித்யா மேனன் - கிண்டலடித்தவர்களுக்கு அதிரடி பதில் - இதோ புகைப்படம்


தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் மிகவும் பிரபலமான நித்யா மேனன், அடுத்ததாக கிரைம் கதையில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நித்யா மேனன் அதனை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 

தி அயர்ன் லேடி என்ற படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயோபிக்கில் நடிக்க ஒப்பந்தமானவர் அதற்கான பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதே சமயம், மலையாளத்தில் இவர் நடித்துள்ள கொளம்பி என்ற படமும், இந்தியில் அக்‌‌ஷய் குமாருடன் நடித்துள்ள மி‌ஷன் மங்கள் என்ற படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.


இயக்குனர்கள் இவரது உடல் எடையை காரணம் காட்டி படங்களில் வாய்ப்பு தர மறுத்ததாக கூறப்பட்டு வந்தது. மேலும், ரசிகர்களும் இவரது உடல் எடையை கிண்டலடித்து வந்தனர். அப்போதெல்லாம் அமைதியாக இருந்த நித்யாமேனன், இப்போது உடல் எடையை குறைத்த பின்பு அந்த கிண்டல்கள் குறித்து வாய் திறந்துள்ளார். 


உடல் எடை என்பது அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலோ, அல்லது சோம்பேறித்தனமாக தூங்கி கொண்டிருப்பதால் மட்டுமே ஏற்படுவதில்லை. சில நேரம், அது ஹார்மோன் பிரச்சனைகளாக கூட இருக்கலாம். ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை கிண்டலடிப்பது மிகவும் மோசமான செயல். அது அவர்களை மிகவும் காயப்படுத்தும். 

அளவுக்கதிகமாக சாப்பிட்டுவிட்டு, உடல் உழைப்பே இல்லாமல் இருக்கும் பலரும் ஒல்லியாகவே இருக்கிறார்கள். அவர்கள் உடல் எடை அதிகரிக்கவில்லையே என்று புலம்புகிறார்கள். அதற்கு காரணம் அவர்களுடைய ஹார்மோன் பிரச்சனை. அதனால் அவர்களை ஒல்லிபிச்சான் என்றும் கிண்டலடிக்க கூடாது என்று கூறியுள்ளார்.யாரையும், எதற்க்காகவும் அவர்களின் உடல் அமைப்பு குறித்தோ, அவர்களுக்கு உள்ள உடல் சார்ந்ந்த பிரச்சனைகள் குறித்தோ கிண்டலடித்து பேச கூடாது என்று கூறியுள்ளார். 

நித்யாமேனனின் இந்த பேச்சுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


Previous Post Next Post