ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ரெஜினா - துணிச்சல் முயற்சி -வைரலாகும் ட்ரெய்லர்..!


தமிழில் மிஸ்டர் சந்திரமெளலி படத்திற்கு பிறகு பார்ட்டி, கசட தபற படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. இந்நிலையில், தெலுங்கில் அவர் நடித்துள்ள "எவரு" படம் ஆகஸ்ட் 15-ந்தேதி திரைக்கு வருகிறது. 

வெங்கட்ராம்ஜி இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே டோலிவுட்டில் பேசப்படும் நடிகையாகி இருக்கிறார் ரெஜினா. கிரைம் திரில்லர் படமான இந்த எவரு டிரைலரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மற்றும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு வேடத்தில் நடித்துள்ளார் ரெஜினா. 


வாழ்க்கையின் வேதனையையும், பதட்டத்தையும் வெளிப்படுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். அதனால் அப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே டிரெய்லரை வைத்தே ரெஜினாவின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது. 


இந்த படத்தில் ரெஜினாவுடன் நவீன் சந்திரா, ஆதிசேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.இந்த படத்தின் ட்ரெய்லர் தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

இதோ அந்த ட்ரெய்லர்,