உங்க தலைவர் கமலிடம் கேட்க வேண்டியது தானே..? - பிக்பாஸ் குறித்து கேள்வி எழுப்பிய ஸ்ரீப்ரியா - வருத்தெடுக்கும் ரசிகர்கள்..!


பிக்பாஸ் சீசன் 3-யில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் பிக்பாஸ் வீடு, பிக்பாஸ் ஹோட்டலாக மாறியது. அதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு துறை ஒதுக்கப்பட்டது. 

அதன்படி, சிறப்பு விருதினராக வனிதா விஜயகுமார் நிகழ்ச்சிக்குள் . அப்போது போட்டியாளர்களிடம் பேசிய வனிதா, வெளியில் இருந்து நிகழ்ச்சி குறித்து தான் சேகரித்த தகவல்களை ஒவ்வொன்றாக தெரிவித்தார். 

இது பிக்பாஸ் வீட்டுக்குள் பூகம்பத்தை உருவாக்கியது. அபிராமி- முகினின் நடபு, கவினின் முக்கோண காதல், பெண் அடிமைத்தனம் என பலவித கருத்துக்களை முன்வைத்து அவர் பேசினார். 

வனிதாவின் பேச்சு பிக்பாஸ் வீட்டுக்குள் அடுத்தடுத்த நாட்களில் பெரிய அதிர்வலைகளை உருவாக்கியது. ஒவ்வொரு பிரச்னையாக இழுத்துவிட்டார் வனிதா. முதலில் அபிராமி மற்றும் முகினை பிரித்தார். பிறகு தர்ஷன் மேல் விமர்சனங்களை உருவாக்க வைத்தார். 

இது பிக்பாஸ் வீட்டை போர்களமாக மாற்றியது. இந்நிலையில், நடிகையும், மக்கள் மீதி மய்யத்தின் முக்கிய குழு உறுப்பினராக இருக்கும் நடிகை ஸ்ரீ ப்ரியா "மக்களால் வெளியே அனுப்பப்பட்ட ஒரு போட்டியாளரை மீண்டும் எப்படி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதித்தீர்கள். 

விஜய் டிவி இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிகழ்ச்சியை தெகுத்து வழங்குவதே நாட்டு மக்களை காப்பாற்ற உருவாக்கப்பட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தான். நீங்கள் நேரடியாக கமல்ஹாசனிடமே இந்த கேள்வியை கேட்டிருக்கலாமே..? என்று ரசிகர்கள் வருத்தெடுக்க தொடங்கிவிட்டனர்.





Previous Post Next Post
--Advertisement--