இந்த தேதியில் ரிலீஸ் பண்ணா போட்ட காசை எப்படி எடுக்குறது..?- விநியோகஸ்தர்கள் அழுத்தம் - பிகில் படக்குழு எடுத்த முடிவு..!


அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கும் படம் பிகில். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 27 ஆம் தேதி தீபாவளி நாளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. இப்படத்தை தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் பெற்றுள்ளது.தமிழக உரிமை சுமார் எழுபது கோடி என்று சொல்லப்படுகிறது.


இதுவே பெரிய விலை என்று எல்லோரும் வியந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்நிறுவனம், தமிழக விநியோகஸ்தர்களுக்கு இப்படத்தை விற்ற வகையில் சுமார் பத்து கோடி இலாபம் சம்பாதித்திருக்கிறதென்கிறார்கள் என்று நம்பகமான விநியோகஸ்தர் வட்டாரங்கள் சொல்கின்றன. 


ஓரிரு நாட்களுக்கு முன் இப்பட வியாபாரம் தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. தமிழக உரிமை மட்டும் 70 கோடி ரூபாய் என்பதால் படத்தை 27-ம் தேதி ஞாயிற்கு கிழமை தான் ரிலீஸ் செய்வேன் என்றால் பெரிய பிரச்சனை ஆகி விடும். அதனால், படத்தை 24-ம் தேதியே ரிலீஸ் செய்ய முயற்சி செய்யுங்கள் என கூறியுள்ளனர் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள். 

இதனை ஏற்றுக்கொண்ட படக்குழுவும் அக்டோபர் 24-ம் தேதியே ரிலீஸ் செய்து விடலாம். அக்டோபர் முதல் வாரத்தில் படத்தின் சென்சார் முடிந்து விடும். இதனால், ஒன்றும் பிரச்னையில்லை என்று நம்பிக்கை கொடுத்திருகிறார்கள்.
Previous Post Next Post
--Advertisement--