Posts

Showing posts with the label Bigil Movie

"அம்மாடியோவ்..." - பிகில் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த காயத்ரி ரெட்டியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

Image
விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடித்திருந்த பிகில் படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியது. அந்த படத்தில் வரும் பெண்கள் கால்பந்து அணியில் இருக்கும் வீராங்கனைகளாக நடித்திருந்த பலருக்கும் பெரிய புகழ் கிடைத்தது.    அந்த கால்பந்து அணிக்கு கேப்டனாக நடித்து இருந்த அமிர்தா ஐயர் அடுத்து ஹீரோயினாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்கும் லிப்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து பெரிய எதிர்பார்ப்பு இதற்கு உள்ளது.    இந்நிலையில் பிகில் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்த காயத்ரி ரெட்டியும் லிஃப்ட் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார்.பிகில் படத்தில் சிங்கப் பெண்களில் ஒருவராக நடித்தவர் காயத்ரி ரெட்டி.    அந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெண்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் இந்தியாவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் 10-வது இடம் பெற்றவர்.      இதில் சில நடிகைகள் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள்.ஆனால், காயத்ரி ரெட்டி மாடலிங் துறையில் இருந்த...

பிகில் பாண்டியம்மாவா இது..? - ரோபோ ஷங்கரின் மகள் எப்படி மாறிவிட்டார் பாருங்க..! - ரசிகர்கள் ஷாக்..!

Image
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக வெளியான விஜயின் திரைப்படம் ‘பிகில்’. இதில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். வியாபார ரீதியாக இந்தப் படம் பெரிதும் பேசப்பட்டது. படம் வெளியாகி பெரும் வசூல் வேட்டை நடத்தியது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் மைக்கேல் மற்றும் ராயப்பன் என இரு வேடங்களில் நடித்திருக்கிறார். ராயப்பன் பாத்திரம் அவரது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.  பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்ததால் பெண்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இதில், பாண்டியம்மா என்ற பாத்திரத்தில் நடித்திருந்த இந்திரஜா சங்கர் அதிக கவனித்தை ஈர்த்திருந்தார்.  இந்நிலையில், இந்திரஜா சங்கர் தான் எடுத்து கொண்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் முற்றிலும் அடையாளமே தெரியாத அளவுக்கு புதிய தோற்றதில் தென்படுகிறார்.  அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

ராயப்பனை அட்ச்சு தூக்கிய தூக்கு துறை - பல ஆண்டுக்காள பட்டத்தை தவறவிட்ட விஜய்..!

Image
சின்னத்திரையை பொறுத்தவரை நடிகர் விஜய் தான் TRP கிங். காரணம், நடிகர் விஜயின் படங்களில் செண்டிமெண்ட் அதிகம் இருக்கும் என்பதால் தான். அதனாலேயே அடிக்கடி விஜய்யின் படங்களை சின்னத்திரைகளில் ஒளிபரப்புவார்கள். இதனால் தொடர்ந்து பல ஆண்டுகளாக சின்னத்திரையில் TRP கிங்காக வளம் வந்துகொண்டிருந்தார் நடிகர் விஜய். ஆனால், இந்த ஆண்டு நடிகர் அஜித் தனது விஸ்வாசம் படத்தின் மூலம் விஜய்யின் பிகில் படத்தின் TRP-யை முந்தி TRP கிங் என்று பல ஆண்டுகளாக விஜய் வைத்திருந்த பட்டதை அலேக்காக தூக்கியுள்ளார். கடந்த தீபாவளி அன்று வெளியான பிகில் திரைப்படம் பொங்கல் பண்டிகையன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை, 1.64 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். ஆனால், கடந்த பொங்கலன்று வெளியான நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தை 1.81 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

ஒரே ஒரு ட்வீட் - ஒட்டுமொத்த ஹேட்டர்ஸ்க்கும் ஆப்பு வைத்த பிகில் பட தயாரிப்பாளர்..!

Image
நடிகர் விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பிகில் திரைபடம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்துள்ளது.  இந்நிலையில், 2019ஆம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பிகில் படைத்துள்ளதாக படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். பிகில் திரைப்படத்தின் 50வது நாளை விஜய் ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.  இதனை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, போலீஸ் வேடத்தில் வரும் ரவுடியை அடிக்கும் விஜய்யின் புகைப்படத்தை வெளியிட்டு, பிகில் படத்தை வெற்றி அடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிகில் படம் தோல்வி படம் என்று கூறி வந்த ஹேட்டர்களுக்கு ஆப்பு வைத்துள்ளார் அர்ச்சுமா என்று கூறி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள். As Bigil completes 50 days at the box office to become the highest grossing Tamil movie of the year across the world we would like to thank each every one of you who loved the film and watched it in theaters near you 🙏😊😊 #TeamBigil —...

வெறித்தனம்... வெறித்தனம்...! - பிகில் 50வது நாள் - விஜய் ரசிகர்கள் வேற லெவல் கொண்டாட்டம்..!

Image
அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த திரைப்படம் பிகில். படத்தின் சிங்கிள் ட்ராக் முதல் ட்ரெய்லர் வரை அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றாலும் படம் வெளியானவுடன் பிகில் குறித்த கலவையான விமர்சனங்கள் வெளிவந்தன.  குறிப்பாக படத்தில் உள்ள காட்சிகள் ஆங்கில திரைப்படங்களில் உள்ள காட்சிகளை காப்பி அடித்து எடுத்ததாகவும் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை எனவும் ஒரு சிலரால் விமர்சிக்கப்பட்டது.  படம் வெளியான முதல் 3 வாரங்களிலேயே உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலை கடந்த இந்த திரைப்படம், தற்போது 50 நாளான இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது.  பிகில் திரைப்படத்திற்கு பிறகு வெளியான படங்கள் கூட திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டுவிட்டன. ஆனால் சென்னையின் பல்வேறு திரையரங்களில் இன்றும் பிகில் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள டிவிட்டரில் #Bigil50thDay என்ற டேக்கை ட்ரென்ட் செய்து வெறித்தனமாக கொண்டாடி வருகிறார்கள். #Bigil50thDay - The highest grosser of Tamil cinema in 2019 ...

இந்த வருடத்தில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 படங்கள்..! காணமால் போன "பிகில்" - ரசிகர்கள் ஷாக்.!

Image
கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட TOP 10 ஹேஸ்டேக்கில் "பிகில்" ஆறாவது இடம்பிடித்தது. இந்த லிஸ்டில் இடம் பிடித்த ஒரே ஒரு தமிழ் படமாகவும் இருந்தது.  இந்நிலையில் கூகுல் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட விஷயங்கள் மற்றும் அதிகம் தேடப்பட்ட படங்கள் லிஸ்டை வெளியிட்டுள்ளனர்.  அதில், அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக் படமான 'கபீர் சிங்' படம் இடம் பிடித்துள்ளது. டாப் 10 லிஸ்டில் வேறு எந்த தமிழ் படமும் இல்லை என்பது தான் ஷாக்கிங்கான விஷயம். Top 10 Keyword Search Top 10 Movies

முடிந்தது "பிகில்" ஓட்டம் - மொத்த வசூல் எவ்வளவு - இதோ முழு விபரம்

Image
நடிகர் விஜய், இயக்குனர் அட்லி கூட்டணியில் கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி வெளியான திரைப்படம் பிகில். நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்த இந்த படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை கருவாக கொண்டிருந்தது.  படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூல் செய்தது. வெற்றிகரமாக ஓடி வந்த பிகில் படத்தின் கடைசி நாள் இன்று. ஆம், நாளை எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் வெளியாகிறது.  தற்போது பிகில் திரைப்படம் ஓடி வரும் 90% திரையங்குகள் நாளை எனை நோக்கி பாயும் தோட்டா-வை திரையிடுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் பிகில் படம் 138 கோடியே 87 லட்ச ரூபாயை வசூல் செய்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.  உலகம் முழுதும் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ள இந்த படம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது என்கிறார்.

வேண்டாம் செல்லம் உனக்கு கிளாமர் வேண்டாம் - "பிகில்" தென்றல் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் - ரசிகர்கள் ரத்த கண்ணீர்

Image
"படைவீரன்' படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்த அம்ரிதா ஐயருக்கு மீண்டும் கிராமத்துப் பெண்ணாக கன்னடத்தில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பேரன் வினய் ராஜ்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு "இராமயணா' என்ற படத்தில் கிடைத்தது.  இதன் படப்பிடிப்பு ராஜ்குமார் பிறந்த ஊரான கஜனூரில் நடப்பட்டது விசேஷமாகும். நடிகை அம்ரிதா ஐயர் தமிழ் பெண்ணாக இருந்தாலும், முதல் நாள் படப்பிடிப்பின்போது படத்தின் இயக்குநர் தேவனூர் சந்துருவிடமும், வினய் ராஜ்குமாரின் தந்தை ராகவேந்திராவிடமும் கன்னடத்தில் பேசி அசத்தினார். அதன் பிறகு அவருக்கு பட வாய்புகள் அதிகம் கிடைத்தன. இந்நிலையில், பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியில் ஒரு வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.  ரசிகர்கள் பலரும் இவரை தென்றல் என்று தான் அடையாளம் காட்டுகிறார்கள். அந்த அளவுக்கு பிகில் தென்றல் கதாபாத்திரம் இவருக்கு பிரபலத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில், தொப்புள், தொடை தெரியும் படியான கவர்ச்சி புகைப்படம் சிலவற்றை வெளியிட்ட அம்ரிதாவை பார்த்த ரசிகர்கள் "வேண்டாம் செல்லம் உனக்கு கிளாமர் மட்டும் வேண்டவே...

இதெல்லாம் அநியாயம், இதை கேட்க யாருமே இல்லையா..? - பிகில் குறித்து புலம்பும் பிரபலம்..!

Image
நடிகர் விஜய்யை வைத்து இயக்குனர் அட்லீ தெறி , மெர்சல் , பிகில் என இதுவரை மூன்று படங்களை இயக்கியுள்ளார்.  இதில் சமீபத்தில் வெளிவந்த பிகில் திரைப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி ஹிட் அடித்தது. வசூல் ரீதியாக உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இயக்குனர் அட்லிபிகில் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இதனை பார்த்த படத்தின் பாடலாசிரியர் விவேக், இதெல்லாம் அநியாயம், இதை கேட்க யாருமே இல்லையா..? எனக்கும் ஒரு டீசர்ட் பார்சல் பண்ணுங்க ப்ரோ என்று புலம்பியுள்ளார்.

"விஜய்யை யாராச்சும் விமர்சித்தால், அவர்களை கண்டிக்க முதல் ஆளா வருவேன்..!" - பிரபல நடிகர் அதிரடி பேச்சு..!

Image
நடிகர் விஜய் நடிப்பிலும், இயக்குநர் அட்லி இயக்கத்திலும் உருவான படம் பிகில்.கடந்த அக்டோபர் மாதம் 25-ம் தேதி தீபாவளி விருந்தாக இந்த படம் வெளியானது. தீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தில், விஜய் மற்றும் நயன்தாரா தவிர்த்து, ஆனந்த ராஜ், ஜாக்கி ஷெராப், யோகி ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வசூல் ரீதியாக படம் ஓ.கே என்றாலும், இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தன. இந்நிலையில்,இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பயணிக்கும் கதாபாத்திரமாக நடித்த நடிகர் ஆனந்த்ராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படம் குறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ளார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப்படம் மிகச் சிறப்பான படம் என்பதில் எள்ளவுக்கும் மாற்றுக் கருத்தில்லை. ராயப்பன் என்ற கேரக்டரில், நடிகர் விஜய், மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரைத் தவிர, வேறு யாரும் அந்தக் கேரக்டரில் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது.  பிகில் வெற்றிக்கு நடிகர் விஜய் மட்டும்தான் காரணம். ராயப்பன் கேரக்டராகவே அவர் வாழ்ந்திருக்கிறார். படத்தைப் பற்றி என்ன வேண்டும...

"பிகில்" போட்ட காசாவது கைக்கு வந்துச்சா..? - பிரபல விநியோகஸ்தர் வேதனை

Image
நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படமாக தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் "பிகில்".  இப்படம் வெளியான அன்றைய தினத்தில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. வழக்கமாகவே விஜய் படத்தின் வசூல் விவரங்கள் என்பது தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாது அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கும்.  காரணம் விஜயின் படங்கள் சமீப காலமாக தமிழ் சினிமாவின் முந்தைய சாதனைகளை முறியடித்து வருகின்றன. எனவே அந்த வரிசையில் பிகில் படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படம் 200 கோடி வசூலித்தாக சொல்லப்பட்டது.  இந்தப் பதிவு ஆதரவோடு சேர்த்து விமர்சனங்களையும் சேர்த்தே பெற்றது. இந்நிலையில் பிகில் படத்தை மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் வியாபாரம் செய்தனர், இதில் போட்ட பணம் வந்ததா? என்று திருப்பூர் சுப்ரமணியத்திடம் பிரபல வார இதழ் கேட்டுள்ளது.  அதற்கு அவர் ‘பிகில் நல்ல வசூல் தான், ஆனால் பெரிய தொகைக்கு படத்தை வாங்கியதால், போட்ட பணம் மட்டுமே கைக்கு கிடை...

விஸ்வாசம் வசூலை தொடுவதற்கு பிகில் இன்னும் இத்தனை கோடி வசூல் செய்யவேண்டும்.!

Image
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் உலகம் முழுவதும் நல்ல முறையில் வசூலித்து வருகிறது.  தற்போது. தளபதி இந்த படத்தின் மூலம் 250 கோடி என்ற ஹாட்ரிக் சாதனையை செய்துள்ளார். பிகில் படம் சென்னையில் மட்டும் 12 நாட்களில் 11.3 கோடி ருபாய் வசூலித்துள்ளது.  இது விஸ்வாசம் படம் மொத்தமாக சென்னை வசூலித்த தொகையான 13.2 கோடி ரூபாயை விட சுமார் 2 கோடி குறைவு.  என்றாலு, "பிகில்" இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் விஸ்வாசம் சாதனையை அடுத்த சில நாட்களில் முடியடித்து விடும் என்று கூறுகிரார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தினர். 

பிகில் - லாபமா..? நஷ்டமா..? - இதோ தயாரிப்பளர் அர்ச்சனா கல்பாத்தி-யே கூறிவிட்டார்..!

Image
விஜய்-அட்லி கூட்டணியில் உருவான பிகில் திரைப்படம் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.  படம் வெளியானது முதலே பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டி வரும் பிகில் திரைப்படம் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  படத்தின் வசூல் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் படத்தை தமிழத்தில் வெளியிட்ட ஸ்கிரீன் சீன் நிறுவனம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஸ்கிரீன் சீன் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர் ஆறுமுகம் தி ஹிந்துவுக்கு அளித்த பேட்டியில், பிகில் படம் தமிழகத்தில் மட்டும் முதல் வாரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் -செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் ஒரு பேட்டியில், பிகில் படத்தின் வசூல் குறித்து ஒரே வாக்கியத்தில் பதில் சொல்லியுள்ளார். அவர் "படம் எங்களுக்கு லாபம் தான். நல்ல profit தான் பண்ணியிருக்கோம்" என்று கூறியுள்ளார்.

10 நாளை நிறைவு செய்த பிகில் - உலகம் முழுதும் 10 நாள் வசூல் எவ்வளவு..? - முழு விபரம் இதோ

Image
தீபாவளி கொண்டாடத்தின் ஒரு பகுதியாக கடந்த 25-ம் தேதி விஜய் நடிப்பில் உருவான பிகில் திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.  இப்படம் உலகம் முழுவதுமே பெரிய வசூல் சாதனை செய்து வருகின்றது, அதிலும் மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் 2 மில்லியன் டாலர் வசூலை கடந்துள்ளது.  இந்நிலையில் பிகில் உலகம் முழுவதும் கடந்த 10 நாட்களில் ரூ 220 கோடி வரை தற்போது வசூல் செய்துள்ளது. மேலும், இவை வரும் நாட்காளில் ரூ 250 கோடி வரை நீளும் என கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தினர்.

தமிழகத்தில் கோட்டை விட்ட விட்டு கேரளாவில் கோட்டை கட்டிய "பிகில்"..!

Image
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பயணித்து கொண்டிருந்தது.  வழக்காக விஜய் படங்கள் என்றாலே மினிமம் கியாரண்டி உண்டு. படம் ஹிட்டோ..? ஃப்ளாப்போ..? ஈஸியாக 100 கோடி என்ற இலக்கை எட்டி விடுகிறது. அப்படி இருக்கும் நிலையில், "பிகில்" ஒரு படமாக தனியாக சாதித்தது என்ன..? படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி விட்டது.  ஆனால், படத்தின் பட்ஜெட் மட்டுமே 180 கோடி. மறுபக்கம் அதே நாளில் வெளியான கைதி திரைப்படம் பட்ஜெட் வெறும் 23 கோடி. ஆனால், வசூல் 47 கோடியை தாண்டியுள்ளது. இதில் எது ஹிட் படம் என்று நாமே கணித்து விடலாம். விஜய் படங்கள் என்றாலே 100-150 கோடி வசூல் உறுதி என்றிருக்கும் நிலையில் பிகில் படம் விஜய்க்கு பெரிய திருப்பத்தை கொடுக்க தவறி விட்டது என்பது தான் உண்மை.  தமிழ்நாட்டில் விஜய்யின் சமகால போட்டியாளராக இருக்கும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெளியான எட்டு நாளில் தமிழத்தில் மட்டும் 125 கோடி ரூபாயை வசூலிக்க, நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் 106 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இத்...

விஸ்வாசம் vs பிகில் - முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படம் எது..? - விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி தகவல்

Image
நடிகர் விஜய்யின் "பிகில்" திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த 25-ம் தேதி வெளியானது. ரிலீஸ் தேதியில் இருந்து இன்று வரை அமோகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு போட்டியாக கைதி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகின்றது. இந்நிலையில், பிகில் படத்தை தமிழ்நாட்டில் வாங்கிய விநியோகஸ்தர் படம் முதல் வார முடிவில் (7 நாட்களில்) ரூ. 100 கோடிக்கு வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார். ஆனால், அதே நேரம் கடந்த பொங்கல் பண்டிகையன்று ரஜினியின் பேட்ட படத்தை எதிர்த்து களமிறங்கிய அஜித்தின் விஸ்வாசம் படம் 8 நாள் முடிவில் ரூ.125 கோடி வசூலித்துள்ளதாக அந்த படத்தின் விநியோகஸ்தர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன் மூலம், நடிகர் விஜய்யின் பிகில் படத்தின் வசூல் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் வசூலை விட குறைவான வசூலை செய்துள்ளது. எனவே, இந்த வருடம் வெளியான படங்களில் தமிழகத்தில் முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் விஸ்வாசம் தான் முதலிடம் என்பது உறுதியாகியுள்ளது.  யூட்யூப், ட்விட்டர் என பிகில் ஃபர்ஸ்ட்லுக் முதல் ட்ரெய்லர் வரை சாதனை மேல் சாதனை...

மேலும் 18 புள்ளிங்கோ அரஸ்ட் - தொடரும் பிகில் கைதுகள் - காவல் நிலையின் முன்பு பெற்றோர்கள் நிலையை பாருங்க..!

Image
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 25-ம் தேதி வெளியான "பிகில்" திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி தராவிட்டால் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு மாவுக்கட்டு போடப்போவதாக மிரட்டல் விடுத்த விஜய் ரசிகரின் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவியது.  இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த விஜய் ரசிகர் பகிரங்க மன்னிப்பு கேட்டும், நான் செய்தது மிகப்பெரிய தவறு என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சியபடி ஒரு வீடியோவை வெளியிட்டார்.  இந்நிலையில், கிருஷ்ணகிரியில் ரகளையில் ஈடுபட்டதாக 7 சிறுவர்கள் உள்பட மேலும் 18 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈடுபட்டது தொடர்பாக ஏற்கனவே 32 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை வைத்து மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டனர்.  இதில் 7 சிறுவர்கள் உள்பட 18 விஜய் ரசிகர்களை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி 7 சிறுவர்களும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கவும், மீதமுள்ள 11 பேர் சிறையில் அடைக்குமாரும் கூறினார்.  ஒரு சாதரண சினிமாவுக்காக ...

பிகில் நஷ்டமா..? லாபமா.? - விநியோகஸ்தர் கூறிய தகவல்

Image
நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியானது.  படத்துக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தாலும் கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளது. இந்நிலையில், படம் முதல் வார முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.  இந்த நிலையில் பிகில் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமத்தை வாங்கிய "ஸ்க்ரீன் சீன் என்டர்டெயின்மென்ட்"-ன் உரிமையாளர் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.  அவர் கூறுகையில், பிகில் திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் வார முடிவில் ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் விநியோகஸ்தர்களுக்கு போதுமான லாபம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். அடுத்தடுத்த நாட்களில் வரும் வசூலை வைத்து தான் பிகில் லாபமா..? நஷ்டமா..? என்ற முடிவுக்கு வரமுடியும் என கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரதினர்.

உலகம் முழுதும் நாடு வாரியாக பிகில் வசூல் - பிரபலம் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்

Image
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் தமிழ்நாட்டில் 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பல நாட்கள் முன்பே 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துவிட்டது. இந்நிலையில் வெளிநாடுகளில் எந்தெந்த ஊரில் எவ்வளவு வசூல் வந்துள்ளது என்பது பற்றிய விவரங்களை பிரபல பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ் ட்ராக்கர் தரன் ஆதர்ஷ் தன்னுடைய அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாடு வாரியாக வசூலித்துள்ள தொகைகள் பற்றிய விபரம் இதோ. அமெரிக்கா -7.21 கோடி ஐரோப்பா - 4.14 கோடி ஆஸ்திரேலியா - 2.30 கோடி ஃப்ரான்ஸ் - 26,996 பார்வையாளர்கள் மலேசியா - 6.76 கோடி நியூசிலாந்து - 9.24 லட்சம் Vijay wows international audience too... #Tamil film #Bigil has a glorious *Week 1* #Overseas ... ⭐️ #USA : $ 1,020,305 [₹ 7.21 cr] ⭐️ #UK : £ 453,017 [₹ 4.14 cr]. Some screens yet to report. ⭐️ #Australia : A$ 470,524 [₹ 2.30 cr] ⭐️ #France [admissions]: 26,996 @comScore 👍👍👍 — taran adarsh (@taran_adarsh) November 1, 2019 #Tamil biggie #Bigil creates havoc...

பிகில் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் - படக்குழு அதிரடி முடிவு

Image
நடிகர் விஜய், நடிகை நயன்தாரா மற்றும் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'பிகில்' படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சங்களை பெற்றது. மேலும், படத்தில் இடம் பெற்ற ஒரு சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின.  ஆனால், அது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அதிகம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்து பிகில் படக்குழுவை கழுதறுத்து விட்டனர். 'மெர்சல், சர்க்கார்' படங்களில் அப்படி சர்ச்சை வந்த போது அது பற்றி பேசப் போய், அதுவே படத்திற்கு இலவச விளம்பரமாகி படத்திற்கு வசூல் அதிகரித்தது. அதனால், இந்த முறை ரசிகர்களைத் தவிர வேறு யாரும் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  இருந்தாலும் படத்தில் இடம் பெற்ற CM Area என்று கேப்டன் மைக்கேல் என விஜய்யைச் சொல்லும் வசனம், குண்டான பெண் கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவரை 'குண்டம்மா, குண்டம்மா' என விஜய் கிண்டலடிக்கும் காட்சி, பிரமாண குடும்பத்தைக் காட்டிய விதம், ஆகியவற்றிற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் மட்டும் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டன.  இவற்றில் 'குண்டம்மா குண்டம்மா' என்ற வசனம் இடம் பெற...