இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்த லக்ஷ்மி குறும்பட நடிகை..! - வைரல் புகைப்படங்கள்...!


'லக்‌ஷ்மி’ குறும்படத்தில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்த லட்சுமிப்ரியா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். 

ரிச்சி, மாயா உள்ளிட்ட பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த நடிகை லட்சுமிப்ரியா, குறும்படங்கள் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 

இவர் நடித்த லக்‌ஷ்மி குறும்படம் பல தளங்களில் பல்வேறு விமர்சனங்களையும் விவாதத்தையும் உருவாக்கியது. இந்நிலையில் தற்போது கதிர் கதாநாயகனாக நடிக்கும் ‘சிகை’ படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கும் ‘பாக்ஸி’ என்ற புதிய திரைப்படத்தில் லட்சுமிப்ரியா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். 


லட்சுமிப்ரியா கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படம் பெண் புகைப்படக் கலைஞர் ஒருவர் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்வதை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருகிறது. 


பல்வேறு மொழிகளைக் கலந்து உருவாகும் இப்படத்தின் கதை தமிழ்நாட்டில் தொடங்கி மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நகர்கிறது.

இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அருவியில் குளிக்கும் புகைப்படம் உட்பட இணையத்தில் வெளியானஅந்த புகைப்படங்கள் இதோ,






Advertisement