ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்களில் தற்போது ட்ரெண்டிங் ஆக உள்ள நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 3தான். இப்போட்டியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில் ஒருவர் நம் தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர் சேரன். இவரின் அனைத்து படைப்புகளும் மிகவும் சிறந்த படங்கள். தமிழ் திரையுலகில் தரமான இயக்குனர் என பெயர் பெற்றவர்.
சில படங்கள் சரியான வசூலை பெறாத காரணத்தால் நஷ்டம் அடைந்ததால் கடனாளி ஆகிவிட்டார். அந்த சூழ்நிலையில் தான் அவருக்கு இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த போட்டியின் அனைத்து விதிமுறைகளையும் ஒத்துக்கொண்டு கையெழுத்திட்ட பின்பு தான் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
இவர் பிக்பாஸ் வீட்டுக்கு சென்றது தவறு என அமீர் உட்பட சில இயக்குனர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், சேரன் என்ன செய்ய வேண்டும் , என்ன செய்ய கூடாது என்பதை முடிவு எடுக்க அவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்று கூறியுள்ளார் இயக்குனர் பேரரசு.
இந்நிலையில், சேரனின் இளவயது புகைப்படம் மற்றும் அவரது தாயாரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.



