நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க பிரபல தயாரிப்பாளர் ஒருவர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஒரு காலகட்டத்தில் நடிகை சௌந்தர்யா, சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
தற்போது இவரது வாழ்க்கை சினிமா படமாக உருவாகவுள்ளது. இவரது பூர்வீகம் பெங்களூர். இவர் எம்.பி.பி.எஸ். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சினிமாவுக்குள் நுழைந்தவர். தமிழ சினிமாவில் ‘பொன்னுமணி’ படம் மூலம் 1993ல் அறிமுகமானார் நடிகை சௌந்தர்யா.
அதையடுத்து ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று பட உலகிலும் உச்சத்தில் இருந்தார். தெலுங்கு சினிமாவில் இவரை அடுத்த சாவித்ரி என்றே அழைத்தனர்.
2004-ல் பெங்களூரு அருகே தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது விமான விபத்தில் பலியானார். இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பொன்னுமணி படத்தில் சௌந்தர்யாவை ஹீரோயினா அறிமுகம் செய்தவர் இயக்குனர் R.V.உதயகுமார். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் நடிகை சௌந்தர்யா குறித்து வேதனையான விஷயம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசியதாவது, நான் 'பொன்னுமணி' படத்தில் சௌந்தர்யாவை அறிமுகப்படுத்தினேன். சௌந்தர்யா முதலில் என்னை அண்ணா என்றார். பிறகு அழைக்கும் போதெல்லாம் அண்ணன் என்றே அழைத்தார். எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. இன்னொருவர் மத்தியில் பேசும்போது சார் என்று கூப்பிடு என்றேன்.
ஆனால் அவர் அண்ணா என்று அழைத்தது முதல் கடைசிவரை சௌந்தர்யாவுக்கு நான் அண்ணனாகவே இருந்தேன். என் மீது தனிப்பட்ட முறையில் மரியாதைவும், அன்பும் அதிகம் உள்ள நடிகை சௌந்தர்யா.
அதன்பின், பெரிய நடிகையாகி விட்டார். ஒரு நாள் அவர் சொந்த வீடு கட்டியபோது என்னை அழைத்திருந்தார். 'நீங்கள் வந்தால்தான் வீட்டுக்குள் செல்வேன்' என்றெல்லாம் அவர் கூறியபோதும் என்னால் செல்ல முடியவில்லை.
பிறகு தனது மாமன் மகனைத் திருமணம் செய்ய முடிவான போதும் அழைத்தார். அப்போதும் என்னால் போக முடியவில்லை. பிறகு தமிழில் 'சந்திரமுகி'யாக வெற்றி பெற்ற படம் கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் பி.வாசு எடுத்திருந்தார். அதில் சௌந்தர்யா தான் நடித்திருந்தார். அப்போது ஒருநாள் சௌந்தர்யா போன் செய்தார்.
'அண்ணா என் சினிமா கதை இத்துடன் முடிந்து விட்டது. இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன். 'ஆப்தமித்ரா' தான் என் கடைசி படம். உங்களிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன். நான் இப்போது இரண்டு மாத கர்ப்பமாக இருக்கிறேன்' என்று என்னிடமும், என் மனைவியிடமும் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
அதன்பின் மறுநாள் காலை ஏழரை மணிக்கு டிவி பார்த்தபோது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அதிர்ச்சியாக இருந்தது. அவர் விபத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தாய் பார்த்து. அவர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு செல்ல முடியவில்லை. திருமணத்திற்கு செல்ல முடியவில்லை. கடைசியில் அவர் இறப்புக்குதான் அவர் வீட்டுக்குச் செல்ல முடிந்தது.
மிக பிரம்மாண்டமாக வீடு கட்டியிருந்தார். உள்ளே சென்றபோது எனது படத்தை பெரிதாக ஃபிரேம் போட்டு மாட்டியிருந்தார். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நடிகை சௌந்தர்யா. இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால் சினிமா அருமையான ஒரே குடும்பம் போன்ற உணர்வுள்ள தொழில். இதில் நம்மை அறியாமல் நமக்கு சொந்த பந்தங்கள் உருவாக்கிவிடும்'. இங்கு இருப்பவர்களும் சினிமா-வை குடும்பமாக எண்ணி நல்ல நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்றார்.

Tags
Soudharya