கார் விபத்தில் விபத்தில் சிக்கிய நடிகர் தருண் - காரில் இருந்து எஸ்கேப் ஆகி ஓடிய சம்பவம்..!


பிரபல தெலுங்கு நடிகர் தருண் இன்று அதிகாலை வேளையில் ஹைதராபாத்தில் உள்ள அவுட்டர் ரிங் ரோடில் தன்னுடைய வால்வோ காரில் சென்றபோது ரோட்டில் உள்ள சென்டர் மீடியனில் மோதி இடித்து விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் காலை முதல் வைரலாக பரவி வருகிறது. அதிர்ஷ்ட்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

TS09 EX1100 என்ற எண் கொண்ட அந்த காரில் இருந்து நடிகர் தருண் இறங்கி தள்ளாடியபடி நடந்து சென்று ஒரு ஆட்டோவில் ஏறிச்சென்று விட்டார் என விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக கூறப்பட்டது. 


அந்த கார் யாருடையது என விசாரித்த போலீசார் அது ஒரு நிறுவனத்தின் பெயரில் பதிவாகி இருப்பதை கண்டறிந்தனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் யார்..? எதற்காக இந்த சிறிய விபத்திற்க்காக காரை விட்டு ஓடி செல்ல வேண்டும்.


காரை ஓட்டி வந்தவர் மது போதையில் இருந்திருக்கலாம். அதனால், பிரச்சனை ஏற்படும் என்று எண்ணி தப்பியிருக்கலாம். யாராக இருந்தாலும் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி செல்லுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் (Hit and Run) என போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஆனால் இது பற்றி விளக்கம் அளித்துள்ள நடிகர் தான் அந்த விபத்தை ஏற்படுத்தவில்லை என்று, இரவு முழுவதும் தான் வீட்டில் தான் இருந்தேன். இப்போதும் வீட்டில் தான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.