பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் மீரா மிதூன். இந்நிலையில் அவர் ஜோயி மைக்கேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
முன்னதாக, ஆடை வடிவமைப்பாளர் ஒருவரிடம் ரூ. 50 ஆயிரம் மோசடி செய்த விவகாரத்தில், பிக் பாஸில் இருந்த போது போலீசாரால் மீரா விசாரிக்கப்பட்டார். அந்த வழக்கில் அவருக்கு பிணை வழக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து முறையாக ஊதியம் தரவில்லை என மீரா மிதூனிடம் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் கூறினார். தற்போது மீரா மிதூன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக ஜோயி மைக்கேல் புகார் எழுப்பியுள்ளார்.
தொலைப்பேசி வாயிலாக மீரா மிதூன் விடுத்த கொலை மிரட்டல் தொடர்பான ஆடியோக்கள் தன்னிடம் இருப்பதாக கூறும் ஜோயி மைக்கேல், அவர் மீது போலீசில் புகார் அளிக்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு பிறகு, இரண்டு படங்களில் நடிக்க மீரா ஒப்பந்தமாகியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் “எங்கள் வீட்டு பிள்ளை” படத்திலும் மீரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் அருண் விஜய் நடிக்கும் "அக்னிசிறகுகள்" என்ற புதிய படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மீரா மிதுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை மகிழ்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மீரா மிதுன்.
Excited for the project 'AgniSirugugal'😇 @arunvijayno1— Meera Mitun (@meera_mitun) August 23, 2019
My heartfelt thankz to @TSivaAmma @NaveenFilmmaker 😊
First flick signed after bigboss @vijaytelevision pic.twitter.com/IDIgSX8zIm