தனது நீண்ட நாள் ஆசை - தல அஜித் பற்றி கூறிய சென்சேஷனல் நாயகி ரம்யா பாண்டியன் என்ன கூறியுள்ளார் பாருங்க..!


ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்தப் படத்தைத் தொடர்ந்து ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் நடத்திய ஃபோட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

ஃபோட்டோ ஷூட் குறித்து நடிகை ரம்யா பாண்டியன் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “வாய்ப்புக்காகத்தான் இந்த போட்டோ ஷுட் நடத்தினீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ரம்யா பாண்டியன், நான் அதிகம் புடவையில் போட்டோ ஷுட் செய்ததில்லை. 


இப்போதுதான் பண்ணிருக்கேன். ஜோக்கர் படத்தை அடுத்து கொஞ்சம் வித்தியாசம் காட்ட மாடர்ன் உடையில் போட்டோ ஷுட் செய்தேன். இப்போது ஒரு மாற்றத்திற்காக மீண்டும் புடவையில் போட்டோ ஷுட் செய்தேன். ஒரு வித்தியாசம் காட்டத் தான் இந்த போட்டோ ஷுட் செய்தேனே தவிர வேறு எந்த காரணமும் இல்லை” என்று கூறியுள்ளார். 


தொடர்ந்து பேசிய அவர், நடிகர் அஜித் குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொண்டார். அஜித் குறித்து அவர் கூறியதாவது, "அஜித் சாரை பற்றி பலரும் பல்வேறு நல்ல விஷயங்கள் கூறுகிறார்கள். அவருடன் பேசணும், பழகணும், சேர்ந்து பணியாற்றவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை" என்று கூறியுள்ளார்.

Advertisement