பள்ளி மாணவி போல குட்டைப்பாவடையில் நடிகை நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்


2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. ஒரு கிராமத்து பின்னணியில் உருவான அத்திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தி போனார். 

கிராமத்தில் கை நீட்டினால் நயன்தாரா போல் ஒரு பெண் இருப்பார் என்று சொல்லுமளவுக்கு கிராமத்து பெண்ணாக இருந்தார். அதே வேளையில் தெலுங்கு மலையாளம் மொழிகளிலும் நடித்து வந்தார். 


தமிழில் மெல்ல மெல்ல கிராமத்துப்பெண் என்ற பார்வையை உடைத்தார் நயன்தாரா. வல்லவன், ஈ, பில்லா உள்ளிட்ட பட படங்கள் அவரை வேறு கோணத்தில் காட்டத்தொடங்கின.தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரங்கள் மற்றும் குடும்பப்பாங்கான காதாபாத்திரங்கள் என கலந்துகட்டியடித்து வந்தார் நயன். இப்போது ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களிலும் நடித்து வருகிறார்.


தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடு பறந்து சென்று தங்களது காதலை கொண்டாடி வருகிறார்கள். அவ்வப்போது இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அந்தவ வகையில், தற்போது பள்ளிமாணவி போல குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு நயன்தாரா வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதோ அந்த புகைப்படம்,