மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். ஜூலை 2009 வரை 175 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கமலஹாசனுக்கும் இவருக்கும் இடையே துவக்கத்தில் இருந்த நெருக்கம், இயக்குனர் சங்கப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டது. இருவருக்குள்ளும் பேச்சுவார்த்தை இல்லாமல் போனது.
திரைப்படத்துறைக்குள் தனது நுழைவுக்கும் மேம்பாட்டுக்கும் காரணமாக இருந்தது கமல்ஹாசன் தான் என்று அடிக்கடி கூறுவார். தற்போது, காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் படங்களை தயாரித்தும் வருகிறார்.
இயக்குனராக இருந்த போது கூட ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகாத இவர் நடிகராகmமாறிய பின்பு ரசிகர்களை கவர்ந்தார். பொதுவாக வெகு சில நடிகர்களுக்கு மட்டுமே உடல் மொழி எனப்படும் பாடி லேங்குவேஜ் அமையும். அந்த வகையில், தனது பாடி லேங்குவேஜ் மூலமாகவே ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Tags
Mano bala