அந்த போட்டியாளருக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை - வனிதா விஜயகுமார் வெளியிட்ட பகீர் உண்மை


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் சாக்ஷி திருமணமாகி விவகாரத்தானவர் என செய்தி பரவியது. இது குறித்து, அவர் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை. 

ஆனால், பிக்பாஸ் போட்டியாளராக இருந்து, நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார், அதை மறுத்திருக்கிறார். பிக்பாஸ் 3ல், போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் நடிகை சாக்ஷி, நடிகர் ரஜினி நடிப்பில் உருவான காலா படத்தில் நடித்தவர். 


அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று, சக போட்டியாளரான கவினை காதலித்தார். துவக்கத்தில் கவினும் சாக்ஷியை காதலிப்பது போலவே போக்குக் காட்டிவிட்டு, கடைசி நேரத்தில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என ஜகா வாங்கி விட்டார். 


இந்நிலையில், நடிகை சாக்ஷி, கடந்த 2011ல் திருமணம் ஆகி பின் விவகாரத்துப் பெற்றவர் என்ற தகவல் பரவி இருக்கிறது. ஆனால், இதை மறுத்துள்ளார் சக போட்டியாளர்களில் ஒருவராக பிக்பாஸ் 3ல் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார். 

அவர், டுவிட்டர் மூலம் தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது: சாக்ஷி எப்படிப்பட்டவர் என்பது எனக்கு, அவரோடு பழகியதில் இருந்து தெரியும். அவர் உண்மையானவர். நற்குணங்களுக்காக அவளை நேசிக்கிறேன். அவரைப் பற்றி தப்பாக புரிந்து கொள்ளப்படும் அளவுக்கு, செய்திகள் பரப்பப்படுகின்றன. 

அவர் திருமணமாகி விவகாரத்தானவர் என சொல்கின்றனர். அவருக்கு திருமணமே நடக்காத போது, விவகாரத்து எப்படி ஆகும்? இப்படித்தான், நடிகைகள் என்றால், ஆளாளுக்கு ஒரு கதை சொல்கிறார்கள். இவ்வாறு வனிதா கூறியிருக்கிறார்.
Previous Post Next Post