வசீகரா, புதிய கீதை, உதயா, மதுர என படங்கள் சறுக்கியதால் நடிகர் விஜய் தடுமாறிய நேரத்தில் திருப்பாச்சி என்ற படத்தின் மூலம் மீண்டும் உற்சாகமூட்டியவர் இயக்குனர் பேரரசு.
இதனை தொடர்ந்து, சிவகாசி என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை பேரரசு-வுக்கு கொடுத்தார் நடிகர் விஜய். திருப்பாச்சி அளவுக்கு படம் போகவில்லை என்றாலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தவர் நடிகை கீதா.
அறிமுகமான புதிதில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது நீண்ட நாள் ஆசை ஒன்றை கூறியுள்ளார்.
பல நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளேன். இன்னும் தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதிக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. விரைவில் அந்த ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.



