சினிமா மற்றும் டிவி என்ற கனவு உலகத்தில் மட்டும் தான் வயது வித்தியாசம் இன்றி திறமை இருந்து அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டால் புகழின் உச்சிக்கே சென்று விடுகிறார்கள்.
அப்படி பல ஹிந்தி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர் அஷ்நூர் கவுர். இவருக்கு தற்போது தான் பதினைந்து வயது தான ஆகிறது. சமீபத்தில் தான் அவர் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
இந்த வயதிலேயே அவர் சீரியல்களில் நடிப்பதன் மூலமாக ஒரு நாளுக்கு பெரும் சம்பளம் பற்றி கேட்டால் நீங்கள் அதிர்ந்துவிடுவீர்கள். ஒரு எபிசோடுக்கு அவருக்கு 40,000 - 45,000 வரை கொடுக்கப்படுகிறது.
தமிழ் சீரியல்களில் உள்ள சில டாப் நடிகைகளே இவ்வளவு பெறுவது கிடையாது.


