மில்க் நடிகை நடிப்பில் சமீபத்தில் வெளியான ட்ரெஸ் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், படத்தின் ரிலீஸ் நாளன்று சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு ஒரு வழியாக சொன்ன தேதியிலேயே ரிலீஸ் செய்தும் விட்டார்கள்.
படத்திற்கு கிடைத்த வரவேற்ப்பால் செம்ம குஷியில் இருக்கிறார் நடிகை. இந்நிலையில், ட்ரெஸ் படத்தின் ரிலீசின் போது எங்கள் தலைவியே, தங்க தலைவியே என்று சில இளசுகள் போஸ்டர் அடித்து அதகளப்படுத்தியது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்நிலையில், அவரது ரசிகர் மன்றம் என்று கூறிக்கொண்டு மில்க் நடிகையை தேடிக்கொண்டு அவரது வீட்டுக்கே சென்று விட்டனர் அந்த ரசிகர் மன்றத்தினர். இதனை பார்த்த மில்க் நடிகைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்துள்ளது.
வந்திருந்த ஆறு பேரையும் அழைத்து காபி கொடுத்து உபசரித்து சிறிது நேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். சற்று நேரம் கழித்து அவர்கள் கிளம்பும் போது காசு எப்படி தருவீங்க..? பணமா..? இல்ல, செக்கா.? என்று கேட்டுள்ளனர்.
விவரம் புரியாத நடிகை. என்ன..? எதுக்கு காசு..? என்று என்று கேட்டிருக்கிறார். அவருடைய ரசிகர்களோ, படம் ரிலீஸ் ஆகும் போது போஸ்டர், ஃப்ளக்ஸ் எல்லாம் வச்சிருக்கோம்-ல அதற்கு தான் என்று கேட்டுள்ளனர்.
ஷாக் ஆன நடிகை நானா உங்களை அதையெல்லாம் செய்ய சொன்னேன் என்று டோஸ் விட்டு, வீட்டு காவலரை அழைத்து அவர்களை அடிக்காத குறையாக வெளியேற்றியுள்ளார்.
இதோ போல சர்ச்சையில் கீசு நடிகையும் பழம்பெரும் நடிகையாக நடித்த படத்தின் போது சிக்கினார் என்பது குறிப்பிடதக்கது.


