சாதாரண காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் - மருத்துவர் கொடுத்த ஷாக்..! - பகீர் தகவல்


கனா படத்தின் வெற்றியை அடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கு கனா ரீமேக்கில் நடித்து வருகிறார்.இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடித்து பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலகத்தை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாகவும் வதந்திகள் கடந்த இரண்டு நாட்களாக பரவிவந்தது.


இந்நிலையில், காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு கட்டணமாக செலுத்தியதாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன், முதன்முதலாக இயக்கியுள்ள படம் ’மெய்’.


ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. மெய் படக்குழு அதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது:- ”காய்ச்சலுக்காக ஒரு நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கு ஒரு லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு கட்டணமாக செலுத்தினேன்.

மருத்துவர்களின் கட்டாயத்தின் பேரில் பலமுறை தேவையற்ற பரிசோதனைகளை செய்து கூடுதலாக செலவு செய்ய நேர்ந்தது. மருத்துவத்துறையில் மலிந்து கிடக்கும் இத்தகைய முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் இவ்வாறு அவர் பேசினார்.