அபிராமி அரங்கேற்றிய லீலை - "சைக்கோ" என கிழித்து தொங்க விட்ட பிரபல நடிகர்..!


பிக்பாஸ் சீசன் 3 ல் தற்போது யாரும் எதிர்பாராத டிவிஸ்ட் நடந்துள்ளது. அமோக ஆதரவுகளை பெற்றிருந்த சரவணன் தவளை தன் வாயால் கெடும் என்ற உவமைக்கு உதாரணமாகி வெளியேறினார். 

கடந்த வாரங்களில் பேருந்து நெரிசலில் பெண்களை உரசுவதற்காகவே சென்றுள்ளேன் என அவர் கூறி அந்த வார்த்தை சர்ச்சைகள் ஆனாலும் அவரை எவிக்‌ஷன் இல்லாமல் நேரடியாக வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளது பிக்பாஸ் குழு. 


இந்த வாரம் அவரும் நாமினேட் ஆகி எவிக்‌ஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். இது ஒருபக்கம் இருக்க அபிராமி தொடர்ந்து வார வாரம் இடம் பெற்று கடைசியில் காப்பாற்றப்பட்டு விடுகிறார். 


முகேன் நன்மைக்காக ஹவுஸ் மேட்ஸ் பலரும் அபிராமியை நாமினேட் செய்துள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் சுஜா வருணியின் கணவரான நடிகர் சிவக்குமார் பிக்பாஸ் அபிராமி குறித்து தனது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். 

இதில், அபிராமி ஒரு சைக்கோ. நம்பமுடியாத அவரின் நாடகங்களை பார்த்த பின் ஹீரோக்களாக இருந்த போட்டியாளர்கள் இப்போது வில்லன்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள் என நினைக்கிறேன். இதற்கு முன் இவர் யாருடனும் காதலில் இருந்ததில்லையா..? ஏன் இந்த மோசமான வேலை..? இளம் ஆண்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கிறார் இந்த சைக்கோ அபிராமி என கூறியிருக்கிறார்.
Previous Post Next Post