நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த பிரபலங்கள் என்ன சொல்றாங்க..! - வாங்க பாக்கலாம்..!


நடிகர் அஜித்குமார் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று பட புகழ் இயக்குனர் வினோத் இயக்கியிருக்கும் "நேர்கொண்ட பார்வை" திரைப்படம் உலகம் முழுதும் வரும் ஆகஸ்ட் 08-ம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், பிரபலங்களுக்கான "பிரீமியர் காட்சி" இன்று காலை சிங்கப்பூரில் திரையிடப்பட்டது. அதே போல பத்திரிக்கையாளர்களுக்கான காட்சி இன்று காலை சென்னை ஃபோர் ஃபிரேம்ஸ் திரையரங்கில் வெளியானது.

இந்நிலையில், படத்தை பார்த்த நடிகர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்து வருகிறார்கள். நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் படத்தை பார்த்துவிட்டு "மொத்த படமும் வாவ். அஜித்தின் நடிப்பு சூப்பர் என கைத்தட்டல்கள்" கொடுத்துள்ளார்.