பாகுபலி நடிகருக்காக பலியான ரசிகர் - நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ


பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் இளம் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது சாஹோ திரைப்படம். நாளை உலகம் முழுதும் வெளியாகவுள்ள இந்த படத்தை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள். 

ஆனால், பாகுபலிக்கு இருந்த அந்த கிரேஸ் இந்த படத்திற்கு இல்லாததால் தமிழகத்தில் மந்தமாக தான் புக்கிங் நடந்து கொண்டிருகின்றது. இந்நிலையில், இந்த படத்தை வரவேற்க ரசிகர் ஒருவர் பேனர் கட்டுகிறேன் என்று மின் கம்பத்தின் மீது ஏறி மின்சாராம் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சக ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 


தனக்கு பிடித்த நடிகருக்காக, பேனர் வைப்பது பால் ஊற்றுவது எல்லாம் செய்ய கூடாது என பலதரப்பட்டவர்கள் கூறி வருகிறார்கள். அவ்வளவு ஏன், வெறித்தனமான ரசிகராக இருப்பார். ஆனால், அவர் கூட இதெல்லாம் பண்ண கூடாது என்று சொல்வார். 


ஆனால், சிலர் உணர்ச்சி மிகுதியாலும், தான் விரும்பும் நடிகர் மீதுள்ள தன்னுடைய அன்பை காட்டவும் இப்படியான வேளைகளில் ஈடுபடுகிறார்கள். இது அவரவர் விருப்பம் என விட்டுவிடலாம். ஆனால், அவற்றை கையாளும் போது மிகக்கவனமாக இருக்க வேண்டும் நண்பர்களே. 

உங்கள் பகுதியில் இது போன்ற ரசிகர்கள் இருந்தால் அவர்களிடம் இந்த விஷயத்தை சொல்லுங்கள். அடுத்த முறை பேனர், ப்ளக்ஸ் கட்டும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பார்.