இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஹீரோயினாக நடிக்கவுள்ள ஸ்ரீ திவ்யா - அதுவும் யாருக்கு தெரியுமா..?


நடிகர் "விதார்த்" நடித்து வந்த காட்டுமல்லி என்ற படத்துக்காக ஆந்திராவிலிருந்து கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டவர்தான் ஸ்ரீதிவ்யா. 

ஆனால் அந்த படம் விதார்த்தின் மார்க்கெட்டின் மந்தநிலை காரணமாக கிடப்பில் கிடக்கிறது. அதற்கடுத்து ஸ்ரீதிவ்யா கமிட்டான படம்தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். 

அப்படம் வெளியாகி வெற்றி பெற்றதால், அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டார் அவர். அதோடு, விஷ்ணு நடிக்கும் வீர தீர சூரன், ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் பென்சில் மற்றும் நகர்புறம் படங்களில் கமிட்டானார். 


ஆனால், அந்த படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் அனைவருமே மார்க்கெட் இல்லாதவர்கள் என்பதால், ஸ்ரீதிவ்யாவும் மந்தமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதனால் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்காக யாருமே அவரை தொடர்பு கொள்ளவில்லை. 


இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை, இனிமேல் வளர்ந்து வரும் ஹீரோக்கள், மந்தமான ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தார். இறுதியாக சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் நடித்தார்.அதன் பிறகு, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எந்த படமும் இவருக்கு கிடைக்க வில்லை.

இந்நிலையில், இரண்டு ஆண்டு இடைவேளைக்கு பிறகு இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார் அம்மணி. ஆம், விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள "மழை பிடிக்கா மனிதன்" என்ற புதிய படத்தில் ஸ்ரீ திவ்யா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 

இதனால் ஸ்ரீ திவ்யா ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.