அஜித், விஜய்-க்கு அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் கொண்ட ஒரு நடிகர் என்றால் அதில் சிம்புவும் ஒருவர். படங்கள் ரிலீஸ் ஆகவில்லையென்றாலும் சிம்பு எப்போதும் லைம் லைட்டில் தான் இருக்கிறார்.
காரணம், அவரை சுற்றி நடக்கும் சர்ச்சை. கமிட் ஆகும் படங்கள் தொடர்ச்சியாக ட்ராப் ஆவது என சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வகையில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படம் ட்ராப் ஆனதை தொடர்ந்து "மகா மாநாடு" என்ற ஒரு படத்தை சிம்புவே இயக்கி தயாரிக்க போவதாக அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பு வெளியாகி மூன்றே நாளில் "மகா மாநாடு" படம் ட்ராப் செய்யப்பட்டு விட்டதாகவும். மீண்டும், வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காரணம், மாநாடு படத்தை நடிகர் தனுஷ்-ஷிடம் வெங்கட் பிரபு கூற அவரும் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால், இப்போ மீண்டும் வெங்கட் பிரபுவை அழைத்து பட வேலைகளை ஆரம்பிக்குமாறு கூறியுள்ளாராம் சிம்பு.
தெலுங்கில் வெளியான "டெம்பர்" பட ரீமேக்கான "அயோக்யா" மற்றும் வெற்றிமாறனின் வட சென்னை ஆகிய படங்களில் சிம்பு கமிட் ஆகி படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராமல் ட்ராப் ஆகியது. ஆனால், இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதிலும், வடசென்னை ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
ஆனால், சிம்புவோ வந்தா ராஜாவா தான் வருவேன்.. மந்திரியாக தான் வருவேன்.. என சுமார் ரக படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் விராக்தியின் உச்சத்திற்கு சென்ற சிம்பு ரசிகர்கள் வீடியோ-வை வெளியிட்டு சிம்புவின் மீதான தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வந்த நிலையில் மீண்டும் மாநாடு படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு என்ற தகவல் தீயாக பரவி வருகின்றது.
பார்ப்போம் இந்த படம் எத்தனை நாளைக்கு என்று என்று சிரிக்கிரார்கள் ரசிகர்கள்.
Tags
Simbhu