நான் ஒன்னும் புதுப்பையன் இல்ல.. உங்க வேலையை பாருங்க.. கமல் பேச்சுக்கு சிம்பு பதிலடி
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், 'உலக நாயகன்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான நடிகர் கமல்ஹாசன், தற்போது இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5, 2025 அன்று வெளியாக உள்ளதால், படக்குழுவினர் தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் முறையாக கமல்ஹாசனும் நடிகர் சிம்புவும் இணைந்து நடித்துள்ள இப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பல நடிகர்களும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், இது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. இந்நிலையில், தக் லைஃப் படம் குறித்து நடந்த ஒரு நேர்காணலில் கமல்ஹாசன் பேசிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் சிம்பு குறித்து பேசுகையில், "சென்ற தலைமுறையைப் போலவே இன்றைய தலைமுறை நடிகர்களும் சிறப்பாக வளர்ந்து வருகின்றனர். சிம்பு படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போது, அனைவரும் அவரிடம் ‘நீ ஒரு லெஜெண்டுடன் இணைந்து நடிக்கப் போகிறாய்’ என்று ...