நடிகை ராய் லக்ஷ்மி நீயா 2 படத்திற்கு பிறகு சின்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். மேலும், கன்னடத்தில் ஜான்சி IPS என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகை விஜயஷாந்தி நடித்த "வைஜெயந்தி IPS" படத்தை போலவே இந்த படத்தில் நடிகை ராய் லக்ஷ்மி பல அதிரடியான காட்சிகளில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த டீசர் வெளியாகி 10 மணி நேரத்தில் பல நிறுவனங்கள் இந்த படத்திற்கான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிக்கான டப்பிங் உரிமையை பெற போட்டோ போட்டி போட்டு வருகின்றன.
கன்னடத்தில் படத்தை தயாரிக்க ஆன மொத்த செலவையும் படத்தின் டப்பிங் உரிமையை பெற கொடுக்கிறோம் என்று கூட சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
Tags
Raai Lakshmi