கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..! - இலியானாவை தூக்கியடித்த இயக்குனர்கள்..! - நொந்து போன இலியானா.!


இடுப்பழகி இலியானா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பிறகு ஹிந்தியில் படங்கள் நடிக்க அங்கு அவரது படங்கள் சரியாக ஓடவில்லை. 

ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கியது தெலுங்கு சினிமாவை பற்றி தரக்குறைவாக பேசினார். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி ஏளனமாக பேசினார். அவர்களுக்கு இடுப்பு தான் முக்கியம். நடிப்பு முக்கியமில்லை. 

படங்களில் என் இடுப்பை படம் பிடித்த அளவுக்கு என் நடிப்பை படம் பிடிக்கவில்லை என்று கூறி தெலுங்கு திரையுலகினரின் எரிச்சலை கொட்டிக்கொண்டார். 

ஆனால், வாழக்கை ஒரு வட்டம் என்பதை அம்மணி மறந்து விட்டார். இவர் நடிக்கும் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருவதால் இவரை பார்த்தாலே தெறித்து ஓடுகின்றது பாலிவுட். 


இதனால், படங்கள் கமிட்டாகாமல் இருந்த இலியானா தன்னை வளர்த்து விட்ட தெலுங்கு திரையுலகம் பற்றிய நினைவு வந்து வாய்ப்பு கேட்டு சில இயக்குனர்கள் அழைத்துள்ளார். 


ஆனால், இயக்குனர்கள் அம்மணி நினைத்த பதிலை கூறவில்லை. எங்களுக்கு இடுப்பு தான் முக்கியம், நடிப்பு முக்கியமில்லை எங்களிடம் வாய்ப்பு கேட்கிறீர்களே.? கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன..! ஒரு இடத்தில் இருந்து முன்னேறி விட்டால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசலாமா..? என்று வெளிப்படையாவே இலியானாவின் பேச்சை வைத்து குத்தி காட்டி பேசியுள்ளனர். 

இதனால், மிகவும் நொந்து போனார் அம்மணி. இந்நிலையில், இவர் பற்றி திருமண செய்தி வந்தது. அவரது நீண்ட நாள் காதலரான ஆண்ட்ரூஸை ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும், லிவ் இன் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது. 

ஜோடியாக பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று காதலை கொண்டாடி தீர்த்தார் அம்மணி. இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு காதலை வளர்த்து வந்தனர். ஆனால், இப்போது என்னவென்றால் இன்ஸ்டாகிராமில் இருவரும் அன் பாலோ செய்ததோடு ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்கள். 

மேலும், நடிகையின் வங்கி இருப்பும்கிட்ட தட்ட 70% காலி.குடும்பத்தினரின் ஆதரவும் இல்லை. தூக்கி வளர்த்த தெலுங்கு சினிமாவை வார்த்தைகளால் எட்டி உதைத்தார். இப்போது, காதலும் இல்லை. இதனால், மிகவும் நொந்து போயுள்ளாராம் அம்மணி.