சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் திவ்யதர்ஷினி. ரியாலிட்டி ஷோக்ளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளினி டிடி. இவர் முன்பு இருந்ததை விட விவாகரத்து பெற்ற பின் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கூறி வந்தனர்.
அதற்கு ஏற்ற போல் டிடியும், வாயால் பேசி மட்டுமே நிகழ்ச்சியை நடத்தியதை விட்டு விட்டு, 'எங்கிட்ட மோதாதே' நிகழ்ச்சியில் ஆட்டம், பாட்டம் என அசத்தினார். இந்நிலையில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள டிடி, மிகவும் குட்டையான ஆடை அணிந்தவாறு புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. விவாகரத்திற்கு பின், திரைப்படம் நடிப்பது, ஃபேஷன் ஷோ, ஆல்பம் பாடல்கள் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தும் இவர், சமீக காலமாக மணப்பெண் கோலம், மற்றும் விதவிதமான ஆடைகள் அணிந்து புகைப்படம் வெளியிட்டு வந்தார்.
இதனால் இவரை பல ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். தொடர்ந்து, பிரபல ஆங்கில பத்திரிக்கையான RITZ-ற்கு மாடர்ன் உடைகளில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மாடர்ன் உடைகள் என்றாலும் ஆபாசம் கலந்து விடாதபடி DD மிகவும் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் லைக்குகளை லாரிகளில் அள்ளி கொட்டி வருகிறார்கள்.
Tags
DivyaDharshini