கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
திரிஷா நடிப்பில் ’கர்ஜனை’, ’சதுரங்கவேட்டை 2’ உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதற்கிடையே, ஏ.ஆர்.முருகதாஸ் கதை, வசனத்தில், ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் திரைக்கதை இயக்கத்தில் உருவாகும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார், என்பதை ஏற்னவே நாம் பார்த்தோம்.
இந்த புதிய படத்திற்கு ‘ராங்கி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். ராங்கி என்றால் திமிர் பிடித்தவள் என்று அர்த்தமாகும். ஆக, திரிஷாவின் வேடம் இந்த படத்தில் அதிரடியான வேடமாக இருக்கும் என்பது படத்தின் தலைப்பே சொல்லிவிடுகிறது.
இந்நிலையில், இந்த படம் குறித்து வந்துள்ள சமீபத்திய தகவல் என்னவென்றால், இந்த படத்தின் சில காட்சிகள் பாலைவனத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளதாம்.
பாடல் காட்சிகளில் நடிக்க பாலைவனம் வர வேண்டும் என்றால் ஸ்கின் டோன் மாறிவிடும், உடல் அசதி ஏற்பட்டு விடும் என ஏக வசனங்கள் பேசி செட் போட்டு படப்பிடிப்பு நடத்த சொல்லும் நடிகைகளுக்கு மத்தியில் நடிகர் திரிஷா உஸ்பெகிஸ்தான் பகுதில் உள்ள பாலைவனத்தில் நடக்கும் ஆக்ஷன் காட்சிகளில் அங்கேயே சென்று நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.
Tags
Trisha