தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. அதனை தொடர்ந்து அவர் மழை, திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி என பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
மேலும் ஸ்ரேயா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழி பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு எனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா கடந்த ஆண்டு ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் புதுமுகங்களின் அறிமுகத்தால் திரையுலகில் காணாமல் போனார்.
ஸ்ரேயா இறுதியாக அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நரகாசுரன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்படம் இன்னும் ரிலீசாகவில்லை.அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஸ்ரேயா பிரபல நடிகர் விமலுடன் இணைந்து சண்டைக்காரி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அடிக்கடி வெளிநாட்டிற்கு ட்ரிப் அடிப்பதை வழக்கமாககொண்டுள்ள இவர் அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கவும் மறப்பதில்லை. இப்போதும் விருது விழாக்கள் என்று வந்து விட்டால் செம்ம ஹாட்டான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களின் கண்களை குளிர்விப்பார்.
அந்த வகையில், சமீபத்தில் பார்சிலோனியா என்றுள்ள அம்மணி அங்குள்ள தெருக்களில் அரை குறை ஆடையுடன் சுற்றி மகிழும் புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.