கடற்கரையில் பிகினி உடையில் தூங்கிக்கொண்டிருக்கும் திரிஷா..! - வைரலான புகைப்படம் - கலாய்க்கும் ரசிகர்கள்..!


தமிழ் திரையுலக 'கனவுக்கு கன்னிகளில்' ஒருவராக இருந்து வரும் திரிஷா, 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில், 'ஜெஸ்சி' கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த காதல் தேவதை ஆனார். 

சமீபத்தில் திரைக்கு வந்த '96 ' படத்தில் 'ஜானு' என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அடி மனதில் இடம் பிடித்தார்.10 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா , இன்னும் சில வருடங்கள் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்க தனக்கு பொருந்தும் கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வளர்ந்து வரும் நடிகைகளிடம் மோதி பார்க்க தயாராகி விட்டாராம் . 


மேலும், 96 படத்தினால் கிடைத்த வெற்றி இவருக்கு சொல்லிகொள்ளும் அளவுக்கு பட வாய்ப்புகளை ஏற்படுத்த தயாராக இல்லை. காரணம், சினிமாவில் ஹீரோயினா கிட்டதட்ட 18 வருடங்களை கடந்து விட்டார் திரிஷா. இன்னும் இவரை ஹீரோயினாக பார்க்க வேண்டுமா..? இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என இயக்குனர்கள் முடிவு செய்துள்ளார்கள். 


இதனால், பட வாய்புகள் பெறுவதில் திரிஷாவுக்கு தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடு சுற்றுலா பறந்து விடும் திரிஷா அங்கிருக்கும் கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் அதிகமாக நேரத்தை செலவு செய்கிறார். 

கடல் அருகில் இருக்கும் போது புத்துணர்ச்சியாக உணருகிறேன் என்று கூறுகிறார் திரிஷா. இந்நிலையில், கடற்கரையில் உள்ள ஒரு நிழற்குடைக்கு அடியில் பிகினி உடையில் படுத்தபடி கண்களை மூடிக்கொண்டு டாப் ஆங்கிளில் இருந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. 

இதனை பார்த்த ரசிகர்கள், புகைப்படம் எடுக்கும் போது என்ன தூக்கம் உங்களுக்கு என கிண்டல் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். 

Previous Post Next Post
--Advertisement--