என்னுடன் அதை செய்ய ஆசையா.? - அப்போ இதை பண்ணுங்க..! - நடிகை ரெஜினா அதிரடி


தமிழில் கண்ட நாள் முதல் படம் மூலமாக அறிமுகமாகி பின்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகை ரெஜினா. 

அதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்பு இல்லாத சமயத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 


இவர் நடிப்பில் தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள படம் 'எவரு'. திரில்லர் படமான இது விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தை மேலும் விளம்பரம் செய்யும் வகையில் ரெஜினா ஒரு போஸ்ட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதாவது, என்னுடன் காபி குடிக்க ஆசையா..? இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க..! என்று படம் குறித்த ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில், இந்த படத்தில் சமீராவின் கணவர் பெயர் என்ன..? என்று கேட்டுள்ளார். இதனை பார்த்த பல ரசிகர்கள் பதிலளித்து வருகின்றனர். படம் பார்க்காதவர்கள் திரையரங்கிற்கு விரைந்துள்ளார். 

படத்தின் ப்ரோமோஷன் என்று கூப்பிட்டால் அதற்கு தனியாக பேமென்ட் கேட்கும் நடிகைகள் மத்தியில் இப்படி தானாக முன்வந்து படத்திற்கு விளம்பரம் செய்கிறாரே இவர் என்று ஆச்சரியத்தில் உள்ளனர் திரைப்பிரபலங்கள்.
Previous Post Next Post