"அப்படிதான்டா பேசுவேன்-னு சொல்லுவேன் நானு...! " - அதான் சொல்லிட்டியே சித்தப்பு..!


நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி 38 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.வீட்டில் இருந்து முதல் ஆளாக பாத்திமாபாபு வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா மற்றும் மீரா மிதுன் ஆகியோரும் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து வைல்ட் கார்டில் 17-வது போட்டியாளராக உள்ளே செல்ல இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் இந்த வார டாஸ்கை யார் சரியாக செய்யவில்லை என்று பிக்பாஸ் கேட்டிருப்பார் போல, அதற்கு இயக்குனர் சேரன் சரவணன் என்று கூற பிரளயம் வெடித்து விட்டது. இயக்குனர் சேரன், நடனம் ஆடும் போது மட்டும் தான் சரவணன் விஜயகாந்த் மாதிரி நடித்தார். தவிர, மற்ற எந்த இடத்திலும் அவர் விஜயகாந்த் போலவே நடிக்கவில்லை என்று புகார் கூறினார்.


இதனால் கடுப்பான சரவணன், நீங்க கூட தான் ரஜினி வேடம் போட்டுக்கொண்டு காமெடியாக இருந்தீர்கள். அவரு என்ன சொல்ல வரார்-னு தெளிவா கேட்டு சொல்லுயா..? என்று தர்ஷனிடம் சரவணன் கூற, அனாவசியமாக வாயா., போயா.,-னு பேசாதிங்க சரவணன் என்று சேரன் கூறினார். உடனே,அப்படிதான்டா பேசுவேன்-னு சொல்லுவேன் நானு...! நீங்க சொல்ல வராத தெளிவா சொல்லுங்க என்று எகிறுகிறார். இதோ அந்த வீடியோ,