விழாவில் பங்கேற்ற ஸ்ரீதேவி மகள் நடிகை ஜான்வி கபூரை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே


இந்தியத் திரைஉலகின் மின்னலாய் வலம் வந்த ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, இந்தி என 300 படங்களில் நடித்திருக்கிறார். கமல்ஹாசன், ரஜினிகாந்த் என இரு பெரும் கதாநாயகர்களின் ஆஸ்தான நாயகி மட்டுமல்ல. 

பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் என பெரும் இயக்குநர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் வளம் வந்தார். தென்னிந்திய திரை உலகில் எல்லாம் வெற்றிகளைக் குவித்த ஸ்ரீதேவியை இந்தி திரை உலகம் இருகரம் கூப்பி வரவேற்றது. 

ஹிந்தியிலும் தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து இந்திப் பட உலகின் லேடி சூப்பர் ஸ்டாராக மகுடம் சூடினார். ஸ்ரீதேவி, நடிகர் அனில் கபூரின் சகோதரரும், திரைப்படத் தயாரிப்பாளருமான போனி கபூரை 1996-ல் மணம் முடித்தார். 


இந்நிலையில் ஸ்ரீதேவியின் மறைவிற்கு பிறகு கடந்த வருடம் வெளியான ‘தடாக்’ படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் அவரது மூத்த மகள் ஜான்வி கபூர். 


தற்போது ’கார்கில் கேர்ள்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவரது தந்தையான போனி கபூர் தயாரிப்பில் உருவாகவுள்ள "தல 60" படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன. 

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவரை ரசிகர்கள் சகட்டு மேனிக்கு கலாய்த்து வந்தனர். என்ன காரணம் என்று பார்த்தால், நிகழ்ச்சியில் அவருடன் இருந்த பிரபலங்கள் அனைவரும் அந்த புத்தகத்தை நேராக பிடித்திருக்க இவர் மட்டும் தலைகீழாக பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.


இதோ அந்த புகைப்படம்,