பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக "மிலி" என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ரூபிணி. இவரை, பூர்ணிமா பாக்யராஜ் பார்த்துவிட்டு ரூபிணியை தமிழில் நடிக்கக் அழைத்து சென்று ஒரு காலத்தில் பெரும் நடிகையாக இருந்தார்.
ரூபிணியின் அம்மா பூர்ணிமா பாக்யராஜின் ஃபேமிலி டாக்டர். அவரால் தான் ரூபிணி பாக்யராஜ் எடுத்த `சார் ஐ லவ் யூ’ படத்தில் கமிட் ஆனார்.
அதன்பின் `தீர்த்தக் கரையினிலே’, விஜய்காந்த்தின் `கூலிக்காரன்’, ரஜினியின் `மனிதன்’ என ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தார். கமல்ஹாசனுடன் இவர் நடித்த மைக்கேல் மதன் காமராஜன் படத்தில் இடம் பெற்ற சிவ ராத்திரி.. தூக்கம் ஏது..! என்ற பாடல் இன்றளவும் பிரபலம். இந்த பாடலில் கமலுடன் ஜோடியாகஆடினார் ரூபிணி.
தற்பொழுது அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது.



