இரண்டாவது முறையாக கர்ப்பமான நடிகை சினேகா - இத்தனை மாதம் ஆகி விட்டதா..?


நடிகை சினேகா, 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2015ல் ஆண் குழந்தை பிறந்தது. விகான் எனப் பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு தற்போது நான்கு வயதாகிறது. 


எல்கேஜி படித்து வருகிறார். இந்நிலையில் சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். தற்போது நான்கு மாதம் ஆகிவிட்டதாக அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா கூறியிருக்கிறார். 


முதல் குழந்தை பெற்ற பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சினேகா, டிவி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் 'பட்டாஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இதனை தொடர்ந்து, மீண்டும் சில மாதங்கள் சினிமாவில் இருந்து விலகியிருக்கவுள்ளார் நடிகை சினேகா.
Previous Post Next Post
--Advertisement--