தமிழில் 2014-ம் ஆண்டு வெளியான அமரகாவியம் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை மியா ஜியார்ஜ். அதனை தொடர்ந்து, அறிமுக இயக்குனர் வசந்த மணி இயக்கத்தில் உருவான 'வெற்றிவேல்' என்ற படத்தில் சசிகுமாருடன் மியா ஜியார்ஜ் ஜோடி சேர்ந்து நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஒரு நாள் கூத்து, ரம், எமன் போன்ற படங்களில் நடித்த இவர் தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வருகிறார்.தமிழ், தெலுங்கு மொழிகளை விட மலையாளம் படங்களில் தான்அதிகம் நடிக்கிறார் மியா.
இது குறித்து அவரிடம் கேட்கையில், தமிழ், தெலுங்கில்எதனால் வாய்ப்புகள் வருவதில்லை என தெரியவில்லை. ஆனால், மலையாளத்தில் எனக்கு பிடித்தமான கதைகள் அமைகிறது என்று கூறுகிறார் மியா ஜியார்ஜ்.
படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் எண்ணம் உள்ளதா..? என்ற கேள்விக்கு நிச்சயம் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன். என்னை ரசிகர்கள் ஒரு பக்கத்து வீட்டு பெண்ணாகவும், அவர்கள் வீட்டில் ஒரு பெண்ணாகவும் நினைகிறார்கள். நான், கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்தால் நானே அவர்களை விட்டு விலகி செல்வது போல ஆகிவிடும் என்று கூறுகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசியக்ர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் மியா. இதோ அந்த புகைப்படங்கள்,
Tags
mia george