பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன், ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி சுலு” போன்ற பெண்ணை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது.
சமீபத்தில் ஒரு நேர்காணலில், தனது தாமதமான தமிழ் அறிமுகத்தின் பின்னணியில் இருந்த காரணத்தைக் கூறினார் வித்யா பாலன். ”ஆரம்பத்தில் நான் தமிழில் தான் நடிக்க விரும்பினேன். ஆனால் பல இயக்குநர்கள் என்னை நிராகரித்தனர். ஒரு தயாரிப்பாளர் என் தோற்றத்தை மோசமாக பேசினார்,
அவரை ஒருபோதும் மன்னிக்கவோ மறக்கவோ முடியாது. நான் சென்னையில் இருந்தபோது ஒரு இயக்குனர் என்னை சந்திக்க வந்தார். காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசலாம் என்று அவரிடம் கூறினேன். அந்த இயக்குனரோ ரூமுக்கு சென்று பேசலாம் என்று வற்புறுத்தினார்.
அவர் என்னை அறைக்கு அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்ததால் வேறு வழியின்றி நானும் ரூமுக்கு சென்றேன். பின் ரூமுக்கு சென்றதும் கதவை திறந்து வைத்தேன். இதனால் கடுப்பான அவர் ஐந்து நிமிடத்தில் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார்” என அந்த நேர்க்காணலில் குறிப்பிட்டுள்ளார் வித்யா பாலன்.
மேலும், ஒரு தமிழ் படத்தில் ஹீரோயினாக என்னை வைத்து சில நாட்கள் ஷூட்டிங் நடத்திய பிறகு படத்தில் இருந்து திடீரென
நீக்கிவிட்டார்கள். பெற்றோருடன் சென்று காரணம் கேட்டேன். நீங்கள்
ஹீரோயினாக செட் ஆக மாட்டிர்கள் என்று என்னுடைய தோற்றத்தை பற்றி குறை சொன்னார்கள் எனவும்
வித்யா பாலன் கூறியுள்ளார்.
அப்படி செய்தது ஆஸ்கர் ரவிச்சந்திரன் தானாம். கடந்த 2003-ம் ஆண்டு வெளியான "மனசெல்லாம்" என்ற படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த
படத்தில் தான் வித்யா பாலனை ஹீரோயினாக தேர்வு செய்து சில நாட்கள் ஷூட்
செய்தார்களாம்.
அதன் பிறகு காட்சிகளை பார்த்துவிட்டு வித்யா பாலன் சற்று
வயது முதிர்ந்தவர் போல தெரிவதால், அவரை நீக்கிவிட்டு த்ரிஷாவை ஹீரோயினாக
போட்டுள்ளனர். ஆஸ்கார் ரவிச்சந்திரன் நடிகர் விஜய்யின் வேலாயுதம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடதக்கது.