ஒரு படத்தில் நடித்த வெயிட்டான கதாபாத்திரத்தில் நடித்த அந்த அழகி நடிகை போதும் டா சாமி என்ற நிலைக்கு வந்துவிட்டாராம். ஹீரோக்களுடன் பனிமலை, வெளிநாட்டு தெருக்கள், மலை உச்சி என ஜோடி போட்டு ஆட்டிக்கொண்டிருந்த அவருக்கு சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனால், நடிகைக்கு பெரிய பாராட்டுகள் கிடைத்தன. இதனால், இனிமே நடிச்சா வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிப்பேன் என அடம் பிடித்து வந்தார் அம்மணி. ஆனால், முந்தைய படத்தின் கதாபாத்திரத்தின் தன்மையில் இருந்து வெளியே வரவே மிகவும் கஷ்டப்படுகிறாராம் அம்மணி.
தற்போது நடித்து வரும் ஒரு படத்தில் படப்பிடிபில் கதைக்கு சற்றும் சம்பந்தமில்லாத முக பாவனைகள் மற்றும் அசைவுகளை கொடுத்து இயக்குனரை ஷாக் ஆகியுள்ளார். என்னமா இப்படி பண்ணிட்டு இருக்க என்று இயக்குனர் கேட்க, என்னால் அந்த படத்தின் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை.
என்னால் பழைய மாதிரி நடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இதனை கேட்டு ஷாக் ஆன இயக்குனர் சரிமா போய் பத்து நாள் ஒய்வு எடு, தியானம் செய் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளார். இதனை பார்த்த சக நடிகர்கள் ஒரு படத்தில் வெயிட்டான ரோல் நடிச்சதுக்கே இப்படியா..? இதுல வேற நடிச்சா வெயிட்டான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று வேறு கூறுகிறார்..? என நடிகையை கிண்டலடித்து வருகிறார்கள்.
Tags
Gossip