நானும் எத்தனை நாள் தான் நல்லவளா இருக்குறது..? - இயக்குனரை ஓட விட்ட இளம் நடிகை


தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனமூன்று மொழிப்படங்களிலும் நடித்து வந்த அந்த வெள்ளை நடிகை தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வந்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் தனது சம்பளத்தை உயர்த்தி தரும் படி கேட்டுள்ளார் நடிகை. 

ஆனால், இயக்குனர் தயாரிப்பாளரும் பிடி கொடுக்க வில்லை. பேசுன சம்பளத்தை வாங்கிக்கோங்க. படம் எதிர்பார்த்தபடி வந்தால் நிச்சயம் சம்பளத்தை கூட்ட தருகிறேன் என தயாரிப்பாளர் நடிகையிடம் கேட்டுப்பார்த்துள்ளார். 

ஆனால், நடிகையோ அதெல்லாம் வேலைக்கு ஆகாத சமாசாரம். இப்போதே என்னுடைய சம்பளத்தை உயர்த்தி கொடுங்கள். நீங்கள் சொன்ன கதை வேறு இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் கதை வேறு. அதனால் தான் கேட்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால், தயாரிப்பாளர் மறுத்து விடவே படத்தில் நடிக்க மாட்டேன் என்று இன்னும் கலெக்ஷன் போடாத செக்கை திருப்பி கொடுத்து விட்டு நடித்தவரை சம்பளம் கொடுங்க என சில லட்சங்களை மட்டும் வாங்கிகொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். 


இதனால் அதிர்ச்சியான தயாரிப்பாளர், இனிப்பு நடிகையை தொடர்பு கொண்டு படத்தில் நடிக்குமாறு கோரியுள்ளார். ஏன் அந்த படத்தில் இருந்து வெளியேறினாய் என்று தன்னுடைய தோழியான வெள்ளை நடிகைக்கு போன் போட்டு கேட்டுள்ளார். விஷயத்தை கேட்ட இனிப்பு நடிகை என்னை நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டாராம். 


இப்போது, படம் பாதியிலேயே நிற்கிறது. இதனால், என்ன செய்யலாம் என யோசனையில் ஆழ்ந்த தயாரிப்பாளர். மீண்டும் வெள்ளை நடிகைக்கே போன் போட்டு படம் முடிஞ்சதும் நீங்க கேக்குற சம்பளத்தை தரேன் தயவு செஞ்சு நடிச்சு கொடுங்க என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஆனால், நடிகையோ நான் நடிக்க மாட்டேன் என்றதும் இனிப்பு நடிகையை தொடர்பு கொண்டீர்கள் அல்லவா..? அவருகிட்டயே பேசிகோங்க. நானும் எத்தனை நாள் தான் நல்லவளா இருக்குறது..? என்று கோபமாக போனை கட் செய்து விட்டாராம்.

வெள்ளை நடிகையின் ஆரம்ப காலத்தில் நடித்த படங்களில் வாய்ப்பு கொடுத்ததே naanநான் தான். ஆனால், வளர்ந்ததும் இப்படி பண்றாங்களே என்று வேதனையில் அறிமுக இளம் நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்து படத்தை மீண்டும் துவங்கியுள்ள தயாரிப்பாளர்.