தமிழின் பிரபல நடிகர்களான விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பலருடன் தொடர்ச்சியாக நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
அவர், நடிகையர் திலகம் படத்தில் நடித்து, அந்தப் படம் பெரிதாகப் பேசப்பட்டப் பின், அப்படியே, இந்திக்கு நடிக்கப் போனார். இருந்தாலும், அவரை தமிழிலும், தெலுங்கிலும் நடிக்க வைக்க பல இயக்குநர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரும் நடிகை நயன் தாரா, டாப்சி, ஜோதிகா வழியில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் படத்தில் மட்டுமே நடிப்பது என முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காரணத்தை வைத்தே, பல படங்களை அவர் மறுத்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தெலுங்கில் மிஸ் இந்தியா என்ற பெயரில் புதுமுக இயக்குநர் நரேந்திரா நாத் இயக்கும் புது படம் ஒன்றில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அந்தப் படம் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படவிருக்கும் படம். விரைவில், அந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Tags
keerthy suresh