மீரா மிதுனை அவரது வீட்டுக்கே சென்று தாக்கிய இயக்குனர் சேரனின் மனைவி..? - பகீர் தகவல்


தன் கணவர் மீது தகாத முறையில் புகார் கூறி வரும் மீரா மிதுனை, சேரனின் மனைவி செல்வராணி நேரில் சென்று அடித்ததாக ஒரு தகவல் பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளார் இயக்குநர் சேரன். 

இவர் மீது முன்னாள் போட்டியாளரான மீரா மிதுன் பல்வேறு புகார்களைக் கூறி வருகிறார். பிக்பாஸ் வீட்டில் இருந்த போதே இருவருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. கடந்த வாரம் கிராமத்து வாழ்க்கை டாஸ்க்கில் சேரன் தன்னிடம் தகாத முறையில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக புகார் கூறினார் மீரா. 


இந்த விவகாரத்தில் சேரனுக்கே மக்களிடம் அதிக ஆதரவு இருந்தது. பிக்பாஸும் குறும்படம் போட்டு சேரன் மீது தப்பில்லை என நிரூபித்தார். ஆனாலும் தனது கருத்தில் இருந்து மீரா மாறவேயில்லை. இதனால், மக்களின் அதிருப்திக்கு ஆளான மீரா, குறைந்த வாக்குகள் பெற்று கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். 


பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகும், தொடர்ந்து சேரன் மீது புகார்களைக் கூறி வருகிறார் மீரா. பிக்பாஸ் வீட்டில் சேரன் ஒரு இயக்குநராகவே நடந்து கொள்வதாகவும், தன்னை கருப்பு கருப்பு என மட்டம் தட்டியதாகவும், தாழ்வுமனப்பான்மை உடையவர் எனக் கூறியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் பேட்டிகளில் கூறி வருகிறார். இந்நிலையில், சேரன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதால், மீரா மீது ஆத்திரமடைந்த சேரனின் மனைவி செல்வராணி, அவரை நேரில் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. 

அப்போது, மீராவை அவர் அடித்ததாகவும் தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் செய்தி காட்டு தீ போல பரவி வருகிறது. இது தொடர்பாக செல்வராணியோ அல்லது மீராவோ அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்தால் தான், இந்த சம்பவம் பற்றிய உண்மைத்தன்மை தெரிய வரும்.