ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் இன்று (செப்.1) வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பிகில் படத்தின் சிங்கப் பெண்னே பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.
சிங்கப் பெண்ணே பாடலைத் தொடர்ந்து ஏர்.ஆர்.ரகுமான் இசையில் விஜய் பாடியுள்ள வெறித்தனம் பாடல் இன்று செப்.1 மாலை 6 மணிக்கு வெளியாகும் என அர்ச்சனா கல்பாதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனால், ரசிகர்கள் அனைவரும் மாலை 6 மணியை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், விஜய் ரசிகர்களுக்கு இன்னுமொரு ஸ்பெஷல் அப்டேட் வந்துள்ளது.
அதன் படி, வரும் ஆயுதபூஜை தினத்தன்று இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் பூஜை தொடங்குகிறது. பத்திரகையாளர்கள் முன்னிலையில் படத்தின் பூஜை தொடங்கவுள்ளது என்பது போனஸ் அப்டேட்.