விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொகுப்பாளினி, கலக்கப் போவது யாரு நடுவர் என்று பன்முகம் காட்டி வரும் ப்ரியங்கா தேஷ்பாண்டே பெங்களூரு பொண்ணு.
ஆனால் படிச்சது சென்னையில், ஆங்கிலம், கன்னடம், இந்தி, என பல மொழிகள் அத்துப்படி. எத்திராஜ் கல்லூரியில் படித்து விட்டு ஜீ தமிழ் சேனல், சன்டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்.
இப்போது விஜய் டி.வியில் பிரபல தொகுப்பாளினியாக உயர்ந்துள்ளார். வாயாடி தொகுப்பாளினி என்று பெயரெடுத்தவர். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமில்லாமல் போட்டியாளர்களை கலாய்ப்பது. நடுவர்களை கலாய்ப்பது என நகைச்சுவையாக பேசுகிறேன் பேர்வழி என்ற பெயரில் ஏதேதோ செய்து கொண்டிருப்பார்.
வெறுமனே ரோபோ போல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு மத்தியில் இவர் கொஞ்சம் வித்தியாசமானவர். அதுவே அவரது அடையாளமும் கூட.
கடந்த 2016-ம் ஆண்டு பிரவின்eஎன்பவரை திருமணம் செய்து கொண்டார். இடையில், இவர் கர்பமாக இருக்கிறார் எந்த தகவல் பரவியது. ஆனால், அது கர்ப்பம் இல்ல மதிய உணவு கொஞ்சம் ஹெவியா சாப்டேன். அந்த தொப்பை என அதற்கும் கிண்டலாகவே பதில் கூறினார்.
வித்தியாசமான உடைகளை அணிவதில் இவருக்கு அலாதி பிரியம். பொசு பொசுவென குண்டாக இருந்தாலும். தனக்கு கச்சிதமாக இருக்கும் ஆடைகளை எப்போதும் அணிவார்.
அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள சில கலக்கலான புகைப்படங்கள் இதோ,