‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் என்ட்ரி ஆனவர் நடிகை அஞ்சலி. அந்த படத்தின் கேரக்டர் ஆனந்தியாகவே கொண்டாடப்பட்டவர்.அதுக்கப்புறம் அங்காடி தெரு கனி கேரக்டர் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போன படம்.
நல்ல கதைகள் என்றால் எந்தவிதமான கதாபாத்திரங்களிலும் நடிப்பார் என்பதற்கு இயக்குனர் ராமின் ‘தரமணி’ தற்போது வெளியான ‘பேரன்பு’ இரண்டும் உதாரணங்கள்.
நடுவில் ‘கலகலப்பாக’ போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரு நடிகருடனான காதல்,சித்தியின் ஏடாகூடங்கள் என்று எக்குத்தப்பாக திசை மாறியது இவரது வாழ்க்கை.
இந்தக் குழப்பத்தால் உடம்பு வெயிட் போட்டு எதிராளியைப் பயமுறுத்தவும் செய்தார்.காதல் நமக்கு சரிப்பட்டு வராது என்ற முடிவில்தான் தீவிர பயிற்சி எடுத்து பழைய அஞ்சலியாக திரும்பி வந்திருக்கிறார். எப்போதும் போல் செலக்டிவான படங்களை மட்டுமே பண்ணும் முடிவில் இருக்கிறார்.
சமீபத்தில்,hஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்கிறேன் என்று "லிசா" என்ற ஒரு படத்தில் நடித்தார். ஆனால், படத்தின் தயாரிப்பாளரோ இந்த பணத்துக்கு ஒரு "பிசா" கடை வச்சி இருந்தா கூட பொழைச்சிருப்பேன் என்ற நிலைக்கு வந்து விட்டார்.
இதனால், இனிமேல் இந்த மாதிரியான ரிஸ்கான விஷயங்களில் மூக்கை நுழைக்க கூடாது என்ற முடிவில் இருக்கிறார் அஞ்சலி. இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில்கோக் குடிப்பது போன்றpபுகைப்படத்தை வெளியிட்டு #cocacola என்ற டேக்கையும் போட்டு கோக் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்துள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பர்களா..? உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் கோக் விளம்பரத்தில் நடித்ததையே தோண்டி எடுத்து விமர்சித்தார்கள். இந்நிலையில், இப்போது அஞ்சலி இப்படி செய்திருப்பதால் அவரை கழுவி ஊத்தி வருகிறார்கள்.
feelingsthe_untold_ Jallikatuu 🔥Marina puratchi😍 elm kaathula pochu😢
brewers_memes OMG she is a vampire...she drinks a farmers blood.
mukeshkannan_pspm_96 Enna madam marketing ah #cocacola kku
udhayakumarshanmuganathan Coke...better you have Tender coconut....Dont promote
Tags
Actress Anjali