இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான் - உறுதியான தகவல்..!


தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் கடந்த மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன் ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இதையடுத்து வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆல்யா மானசா, பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்ரீரெட்டி, சங்கீதா உள்ளிட்டோர் வைல்ட் கார்டில் உள்ளே செல்ல இருக்கும் போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளனர். 


இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. அதில், எவிக்‌ஷனுக்காக அபிராமி, கவின், மதுமிதா, ரேஷ்மா மற்றும் ஷாக்‌ஷி என 5 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 


இதில், இந்த வாரம் நடிகை ஷாக்சி வெளியேறவுள்ளார் என்ற நம்பதகுந்த தகவல் வந்துள்ளன. ஷாக்சிக்குrரசிகர்களிடம் போதுமான ஆதரவு இல்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், ஷாக்சியின் பெற்றோர் அவரை வெளியே அனுப்பும்படி தனிப்பட்ட முறையில் பிக்பாஸ் குழுவிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
Previous Post Next Post
--Advertisement--