சரவணன் வெளியேற்றம் குறித்து இயக்குனர் சேரன் சொல்வதை கேட்டீங்களா..? - என்ன சொல்லி இருக்காரு பாருங்க..!


பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்துவரும் பிக் பாஸ் - 3 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களில் ஒருவரான நடிகர் சரவணன், பிக் பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டார். 

பேருந்தில் பெண்களிடம் தவறாக நடப்பது குறித்த அவரது பேச்சுக்காக அவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.இதில் என்ன கொடுமை என்னவென்றால், வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தவரை அழைத்து , 40 நாட்களாக அவர் உடனிருந்த போட்டியாளர்களிடம் எதுவும் சொல்லாமல், அவர்களை சந்திக்க கூட விடாமல் கன்ஃபஷன் அறையில் இருந்து அப்படியே வெளியேற்றப்பட்டார் சரவணன். 


இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் பலரும் சரவணன் வெளியேறியதை அறிந்து கதறி அழுதனர். இந்நிலையில், சற்று முன் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் சரவணன் வெளியேற்றப்பட்டது குறித்து இயக்குனர் சேரன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். 


கவின் மற்றும் சாண்டி ஆகிய இருவரும் சரவணன் வெளியேறியதை நினைத்து சோகமாக அமர்ந்திருக்க, இயக்குனர் சேரன் " காரணம் சொல்ல முடியாத அளவுக்கு ஏதாவது ஒரு காரணத்தினால் அவர் வெளியே சென்றுள்ளார். நிச்சயம் அதனை அவர் சமாளிப்பார். அவரிடம் அந்த பிரச்னையை எதிர்கொள்ளும் கேபாசிட்டி உள்ளது என கூறியுள்ளார்.
Previous Post Next Post