கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவி கடந்த ஒரு வருடமாக எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கியே உள்ளார். கணவருடன் நேரம் செலவழிக்க தான் விரும்பி இந்த இடைவேளை எடுத்ததாக அனுஷ்கா சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
ஆனால், திருமணம் ஆன நடிகைகளை சுற்றி பறக்கும் அதே கிசுகிசு தான் அனுஷ்காவை சுற்றியும் பறந்து கொண்டிருந்தது. ஆம், அனுஷ்கா ஷர்மா கர்பமாக இருக்கிறார் அதனால் தான் படங்களில் நடிப்பதை தவிர்க்கிறார் என்று கூறி வந்தனர்.
ஆனால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறும் விதமாக சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட பிகினி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்,. இதனை பார்த்த விராட் கோஹ்லி முதல் ஆளாக இதய வடிவ குறியீட்டையும், கண்களில் காதல் தெரியும் குறியீட்டையும் கமென்ட் செய்துள்ளார்.
இது குறித்து, நடிகை அனுஷ்கா ஷர்மா "நான் என் நண்பரை திருமணம் செய்துகொண்டிருக்கிறேன். அவர் என்னை நன்றாக பார்த்துக்கொள்கிறார்" என்று கூறியுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி லைக்குகளை அள்ளி வருகிறது.
Tags
Anushka Sharma